பக்கம்:அறுந்த தந்தி.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 அறுந்த தந்தி

பலவாருக அங்கலாய்த்துத் துக்காக்கிராங்தனுக இருக்தான் அந்த அரசன்.

ஒரு நாள் அரண்மனை ஜோசியனே அழைத்துத் தன் குமார்ன் ஜாதகத்தைப் பார்க்கச் சொன்னபோது, அந்த ஜோசியன் வேந்தன் மனம் குளிரும்படி நம்பிக்கையூட்டும் சில வார்த்தைகளைச் சொன்னன்.

‘அரசே, இந்தப் பிள்ளையினல் இந்த ராஜ்யத்துக்கு ஒரு பெரிய லாபம் உண்டாகப்போகிறது. சாக்ஷாத் லசஷ்மீ தேவியைப் போன்ற பெண்மணி ஒருத்தி இவனுக்குப் பட்டமகிஷியாக வாய்ப்பாள். ஆளுல் ஒரு விஷயத்தை மாத்திரம் நான் மகாராஜாவுக்கு வியக்தமாகச் சொல்லா விட்டால் பெரிய அபாதி ஆகிவிடுவேன். பதினெட்டு வயசுக்குப் பிறகு இவன் தனியே இந்த நகரத்திலே இருப் பானைல் பைத்தியம் பிடித்துவிடும். பெண் துணையின்றி இந்த நகரத்தில் இவன் உலாவுவது அபாயத்தையே விளை விக்கும்' என்று ஜோசியன் சொல்லிவிட்டுப் போஞன்.

அரசனுக்கு ஒரு விதத்தில் சந்தோஷம் ஏற்பட்டாலும் மற்ருெரு விதத்தில் மிகுந்த கவலை உண்டாயிற்று. பதி னெட்டு வயசுக்குப் பிறகு இவன் தனியே இங்கே இருக்கக் கூடாதென்ருல், இவனுக்கு ஒரு மணமகளைத் தேடிக் கொண்டு வந்து கல்யாணம் செய்வதா? அல்லது இவ னேயே ஊரை விட்டு ஒட்டிவிடுவதா? என்ன செய்வ தென்று விளங்கவில்லையே! இந்த மடையனே விரும்பிக் கல்யாணம் செய்துகொள்ள இங்கே யார் தேடிக்கொண்டு வருவார்கள்? இவன் ஊரை விட்டுப் போனுல் இவனுடைய முட்டாள்தனம் உலகம் முழுவதும் பாவும்படி அல்லவோ இவன் நடந்துகொள்வான்? இந்தச் சங்கடத்திற்கு என்ன செய்வது?’ என்று பலபல யோசனைகளில் ஆழ்ந்து தவித் தான். கடைசியில் பரமசிவன் விட்டபடியே நடக்கட்டும் என்று தீர்மானித்தான்.

தன் குமாானே அழைத்து, அப்பா, நீ சில காலம் தேசாடனம் செய்து வந்தால் நல்லது. அங்கங்கே உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/167&oldid=535406" இலிருந்து மீள்விக்கப்பட்டது