பக்கம்:அறுந்த தந்தி.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதையும் கத்திரிக்காயும் 161

அதிசயங்களை எல்லாம் கண்டு வாலாம். உனக்கு என்ன வாகனம் வேண்டுமோ அதையும், என்ன பொருள் வேண் டுமோ அதையும் கொண்டு போகலாம். துணைக்கு எவ்வ ளவு பேர் வேண்டுமோ அவ்வளவு பேரை அழைத்துக் கொண்டு போ’’ என்று அளகேசன் சொன்னன்.

ராஜகுமாரன் அதைக் கேட்டுச் சிரித்தான். நான் இந்த ஊரை விட்டுப் போக வேண்டும் என்று சொல்கிறீர் களோ? அதெல்லாம் முடியாது. வாகனம், கீகனம் எல் லாம் எனக்கு எதற்கு? எனக்குத்தான் ஏறி ஒட்டத் தெரி யாதே’ என்ருன்.

அப்படி அல்ல குழந்தாய்; உனக்குக் கல்யாணம் ஆகும் வயசு வந்துவிட்டது. பூலோகத்தில் எவ்வளவோ ராஜகுமாரிகள் இருக்கிருர்கள். அவர்களுக்குள் மிகவும் அழகுடைய ஒருத்தி உனக்கு மனேவியாக வருவாளென்று சோதிடர்கள் சொல்கிருர்கள். நீ அவளைத் தேடிக்கொண்டு போளுல் அவளை நீ அடையலாமாம்' என்று அரசன் சொன்னுன்.

கல்யாணம் என்ற பேச்சு வந்தவுடன் ராஜகுமார லுக்கு உற்சாகம் உண்டாயிற்று. 'அப்படியானல் நான் இன்றைக்கே புறப்படுகிறேன். எனக்கு யானே, குதிரை முதலிய வாகனங்களைக் கண்டால் பயமாக இருக்கிறது. பல்லக்கில் போகலாம். ஆணுல் பெண்டாட்டியைத் தேடிக் கொண்டு போகும் என்ளுேடு வேறு யாரும் வரக்கூடாது. பல்லக்குச் சுமக்கும் ஆள்கூடக் கூடாது. அவர்கள் வந்தால் என் ராணியோடு பேசுவதற்கு எனக்கு வெட்கழாக இருக் கும். மாட்டு வண்டியாக இருந்தால் இல்லது. ஜ்ள மாடு என்ருல்கூட எனக்குப் பயமாக இருக்கிறது: ... = மொட்டை வண்டியில் இரண்டு எருமை *... • , பூட்டித் தாருங்கள். அந்த வாகனமே எனக்கு போதும். எனக்கு வேண்டிய பணமும் உணவுப் ப்ொருளும் கொண்டுபோகிறேன்; வேறு ஒன்றும் வேண்டாம்;

அ.அ. 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/168&oldid=535407" இலிருந்து மீள்விக்கப்பட்டது