பக்கம்:அறுந்த தந்தி.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 அறுந்த தந்தி

மகானுக இருக்கவேண்டும். கன் தேசத்தைத் தியாகம் செய்துவிட்டு வந்திருக்கிருன். ஆல்ை இந்த வண்டியை ஒட்டிக்கொண்டு வருவதற்குக் காரணத்தான் விளங்க வில்லை. என்ன விரதமோ? என்ன சங்கற்பமோ? மகான் களுடைய போக்கே அலாதியானது' என்று சொல்லிக் கொண்டார்கள். அதிகமாகப் பேசாமல் இவன் போகி முன். நிச்சயமாக இவன் ஏதோ பெரிய காரியத்தைச் சாதிக்கப் போகிருன். நம்மைப்போன்ற மூடப் பிணங்களே சளசளவென்று பேசிக்கொண் டிருக்கும்” என்று சிலர் சொன்னர்கள். பலர் அவன் போன வண்டிச் சுவட்டின் மண்ணை எடுத்துத் தரித்துக்கொண்டார்கள். இப்படியாக அவன் தன் நாட்டை விட்டுத் துாரப் பிரதேசத்திற்கு வர வா, ஜனங்களுக்கு அவனிடம் மதிப்பும் பயபக்தியும் உண்டாயின. அவன் அவற்றை யெல்லாம் கவனிக்கவே இல்லை. தன்சீனத் தேடி வரும் அழகியைக் கானும் ஆசையை உள்ளத்தில் இருத்தி, திருநீற்றையும் சிவநாமத் தையும் கைவிடாமல் போய்க்கொண்டே இருந்தான்.

3

சிவபுரி, சிவபுரி என்று ஒரு பட்டணம். அந்தப் பட்டணத்தில் சைவசீலன் என்ற ராஜா ராஜ்ய பரிபால னம் பண்ணிக்கொண்டு வந்தான். அவன் பெரிய சிவபக் தன். அவனுடைய ராஜ்யத்தில் சிவனடியார்களுக்கு மதிப்பு அதிகம். சிவநாமம் சொல்கிறவர்களானல் அவர் கள் செய்யும் குற்றத்தை மன்னித்துவிடுவான். அவனுக் குச் சிவகாம சுத்தரி என்று ஒரே பெண்; சர்வாங்க சுந்தரி யாகவும், சாதுர்ய புத்தி படைத்தவ்ளாகவும் இருந்தாள். அவளுடைய அழகுக்கும் அறிவுக்கும் ஏற்ற புருஷனைத் தேடிக் கல்யாணம் செய்துவைக்க வேண்டுமென்று சைவ சீலன் கினைத்தான். அதற்காக எவ்வளவோ தேசத்து ராஜ குமாார்களுடைய படங்களேயெல்லாம் வருவித்துப் பார்த் தான். ஒருவனுவது அவன் மனசுக்குத் திருப்தி அளிப் பவனுக இல்லை. நல்ல சுந்தா புருஷனுகவும் சிவபக்தனுக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/171&oldid=535410" இலிருந்து மீள்விக்கப்பட்டது