அறுந்த தந்தி 13
சரணங்களைப் பாடினர்; பதங்களை இழைத்தார்; அர்த்த பாவமும், ராக சஞ்சாரமும் ஒன்ருேடொன்று போட்டி யிட்டு உள்ளத்தைக் கவர்ந்தன. ராகத்தின் ஆரோகணமும் அவரோகணமும் அருமையாகவும் அழகாகவும் இருந்தன. குருமூர்த்தி ஐயரின் சந்தோஷம் மாத்திரம், உணர்ச்சி மட்டும், ஆரோகணகதியிலே சென்றன.
'முத்திரை வைத்திருக்கிறேன்’ என்று சர்மா முன்பே சொல்லியிருந்தார். அதைக் காதுகுளிரக் கேட்க வேண்டுமென்று ஆவலோடு காத்திருந்தார் குருமூர்த்தி ஐயர். கடைசிச் சாணத்தில் அந்த முத்திரை வரப்போ றது, வரப்போகிறது, ராமபத்திானென்னும் பெயர் கீர்த்த னத்துக்குத் திலகமாக அமையப் போகிறது என்று தம் கற்பனையை விரித்து வைத்திருந்தார். இரண்டு சாணங்கள் முடிந்தன. கடைசிச் சாணம் தொடங்கியாயிற்று. முத் திரை எங்கே? முத்திரை எங்கே?' என்று அவர் உள்ளம் தேடியது ; காது கூர்மையாக இருக்தது.
'முச்சகம் புகழ்குரு மூர்த்தி தாசன்!”
என்ற அடி அவர் காதில் விழுந்தது. முத்திரையா அது? இதில் ராமபத்திரன் தன் பெயரை வைக்கவில்லையே! நம்மை பல்லவா வைத்திருக்கிருன்? நம்முடைய தாசளும்! யார் தாசன்? யார் குரு?’ என்ற எண்ணங்கள் அவர் உள்ளத்தே எழுந்தன.
ரோமபத்திரா மேலே ஒடவில்லை வாக்கு. அவர் கண்கள் பேசின பாஷையைச் சிஷ்ய்ர் உணர்ந்துகொண் டார். :Ի
'அப்படித்தான் இருக்கவேண்டும். அதுதான் முத்திாை !”
அறுந்த தந்தியில் சர்மாவின் பொறுமையையும், முடிந்த கீர்த்தனத்தில் அவர் விநயத்தையும் உணர்ந்து கொண்ட குருநாதரின் உள்ளத்தில் பொங்கின உணர்ச்
சிக் கட்ல் அவரை மெளனத்தில் ஆழ்த்திவிட்டது.
1”