26 அறுந்த தந்தி
பார்த்து நான் ஆறுதல் அடைகிறேன். இக் கக் குழந்தைக்கு உயிர் கொடுங்கள். காயம் ஆறுமா, சாமி?’ என்று அழுதான்.
'பயப்படாதே; ஆறிவிடும். ஆனல் கொஞ்ச நாள் ஆகும்.'
'எவ்வளவு நாள் ஆலுைம் ஆகட்டும். இனி நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். இவளுக்கு நான் மிகவும் துக்கத்தைக் கொடுத்துவிட்டேன். குழந்தை காலில் நான் கீறினதைப் பார்த்து மூர்ச்சை போட்டு இவள் விழுந்து விட்டாள். முதலில் கான் இவள் காலில் விழவேண்டும். இதோ உங்கள் முன்பாகவே-ஆம், நீங்கள்தாம் தெய் வம்-தெய்வ சாகதியாக நான் இவள் காலில் விழுகிறேன். என்னே இவள் முதலில் மன்னிக்கட்டும், நீங்களும் மன் னித்துவிடுங்கள். நான் பாவி! மகா பாவி!' என்று அவன் காலில் விழுத்தான்.
அவள் சட்டென்று குழந்தையோடு எழுந்து விலகிக் கொண்டாள். கடவுளே! என்ன இது ?' என்று அவள் கூவினுள்.
நானும், 'கடவுளே! என்ன இது ' என்று அதே கேள்வியைக் கேட்டேன். அந்தக் கேள்வி என் உள்ளத் துள் ஆழ்ந்து ஒலி எழுப்பியது. குழந்தையின் புண்ணே நான் ஆற்றிவிடுவேன். ஆனல் அந்தப் புண்ணுக்குக் கார ணமான சமுதாயத்தின் புண்ணே, இந்திய சமூகத்திலே ஆழ்ந்து காயமாக நிலவிவரும் ஏழைமையைப் போக்க என்னிடத்தில் மருந்து ஏது? கடவுளே! தோன் பசிப் பிணி மருத்துவகை இருக்கிருய்! நீ அருள் செய்ய வேண் ம்ெ. இல்லாவிட்டால் ஏழைகளாகிய எங்களுக்குப் புகல் இல்லை...'
நான்தான இப்படி நினக்கிறேன்! என் கண்ணு நீரை வடிக்கிறது!
கடவுளே! என்ன இது?