28 அறுந்த தந்தி
கேட்டு மற்றவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். இந்த வார நாடக வசூலில் ரூ. 200 சுயமரியாதைக்காார் சங்கத் துக்குக் கொடுப்பார்; அடுத்த வார வசூலில் ரூ. 500 சாதன தர்ம சபையாருக்கு வழங்குவார். அவர் கட்சிப் பிரதிகட்சிக்கு மேலே போனவர்; எல்லாருக்கும் வேண்டி
靶Jāff。
லசஷ்மி தேவி அவர் நாடக சபையில் பிரதான கதா நாயகி வேஷம் தரிப்பவள். அவளுடைய குயிற் குரலும் அழகும் நடனத் திறமையும் தினம் ஏதாவது ஒரு பத்திரிகையில் புகழப் பெற்று விளங்கும். ராஜ பார்ட்டு ாங்கசாமி என்ன சாமானியமானவரா? அவர் ஊருக்கு வரும்போது, வேஷம் இல்லாத வெறும் ஆளைப் பார்க்கவே ஆயிரக்கணக்கில் ஜனங்கள் கூடுவார்கள் என்ருல் நாடகத் துக்கு வரும் கூட்டத்தைப்பற்றிச் சொல்வானேன்?
எல்லாருக்கும் மேலாகக் குமரகுருபா முதலியார் அதிருஷ்டசாலி என்பதை அவருக்கு ஹாஸ்ய நடிகர் நட ராஜ பிள்ளை கிடைத்தது ஒன்றிஞலேயே சொல்லிவிடலாம். ஹாஸ்யக் கலை நடராஜ பிள்ளையுடன் பிறந்தது. அவர் நடந்தாலும், கின்ருலும், இருந்தாலும் பக்கத்தில் இருப் பவர்கள் சிரிக்காமல் இருக்க முடியாது. பேசினல் வயிறு புண்ணுகிவிடும். குமரகுருபா முதலியாருக்கு அவர் ஒரு கற்பகம்; காமதேனு; காசு காய்க்கும் மாம். -
நாடகத்துக்குப் பிரதான நடிகர் யாரும் வர முடிய வில்லை ; அப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்துவிட்ட தென்று வைத்துக்கொள்வோம். நடராஜ பிள்ளை ஒருவர் இருந்தால் போதும்; வசூலில் குறைவே இாாது. அதில் வேடிக்கை என்னவென்ருல், உண்மையிலே அப்படி ஒரு சமயம் வந்தால் ஜனங்களுக்கு அதிக உற்சாகம் ஏற்பட் விடும். முக்கியமான நடிகர்கள் இல்லாத குறையை ஹாஸ்ய சக்கரவர்த்தி நடராஜ பிள்ளை கிாப்பிவிடுவார் என்று குமரகுருபா முதலியார் விளம்பரம் செய்வார். நிச்சயமாக அன்று இாட்டிப்பு வசூலாகும்.