பக்கம்:அறுந்த தந்தி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாஸ்ய கடிகர் . 29

நடராஜ பிள்ளையை எத்தனையோ நாடகக்காரர்கள் கூப்பிட்டுப் பார்த்தார்கள். சினிமாக்காரர்கள் விலைக்கு வாங்க எண்ணினர்கள். முடியவில்லை. தெய்வ பக்தியும் விசுவாசமும் உள் 6 கடராஜபிள்ளை க்குக் குழரகுருபாரை விட்டுப் போக மனம் இல்லை. ஆதிகாலத்தில் அவருக்கு உற்சாகமூட்டி இந்த நிலைக்கு வரப் பண்ணினவர் குமா குருபரர் என்ற விஷயத்தை ஹாஸ்ய சக்கரவர்த்தியான பிறகும் அவர் மறக்கவில்லை. குமரகுருபாரும், காம் வைத்து வளர்த்த செடிதானே?’ என்று அலசஷ்யமாக இராமல் பணத்திலும் மதிப்பிலும் நடராஜ பிள்ளைக்கு உரிய ஸ்தானத்தை அளித்தார்.

மதுரையில் ஹரிஜன காலேஜ் நிதிக்குச் சகாய நாட கம் நடக்கப் போகிறதென்ற விஷயத்தை மூன்று மாசத் துக்கு முன்பாகவே விளம்பரம் செய்யத் தொடங்கிஞர் கள். ஹாஸ்ய நடிகர் நடராஜபிள்ளையின் படம் பல பல கோலங்களில் விளம்பரத்தை அலங்களித்தது.மற்ற நடிகர் களே ப்பற்றியும் விளம்பரங்கள் வெளியாயின. நாடகம் நடக்கும் தேதி நிச்சயமாகிவிட்டது. ஹரிஜன சங்கத்தாரும் பொது ஜனங்களும் ஏதோ பெரிய உற்சவம் நடந் தால் எப்படி ஈடுபடுவார்களோ, அப்படி என்றும் இல்லாத உற்சாகத்தோடு ஏற்பாடுகளைச் செய்து வந்தார்கள்.

உதவி நாடகம் கடக்கும் தினத்துக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கிறது. அப்போது எதிர்பாாாதபடி நடராஜ பிள்ளை தம் சொந்த ஊருக்குப் போய்ச் சில வாரங்கள் தங்கும்படி கேர்ந்துவிட்டது. அவருடைய குழந்தைஒரே பிள்ளை-நோய்வாய்ப்பட்டு இருந்தமையால், அவர் சொந்த ஊருக்குப் போய் வேண்டிய பரிகாரங்களைச் செய் யலானர். டைபாயிடு ஜூரம் குழங்தைக்கு வங்கிருந்தது. மூன்று வாரம் போகவேண்டும். மூன்று வாரமும் குழந் தையின் பக்கத்திலே இருக்கவேண்டும் என்று ஹாஸ்ய சக் காவர்த்தி கினைத்தார். குழந்தைக்குக் குணமாகும் விஷயத் தில் அவருக்கு இருந்த கவலையைக் காட்டிலும் குமரகுரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/36&oldid=535277" இலிருந்து மீள்விக்கப்பட்டது