பக்கம்:அறுந்த தந்தி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அறுந்த தந்தி

தில் நடந்ததற்காக, அந்தக் குழந்தை தீபாவளியன்று கண்ணேக் கசக்கிக்கொண் டிருக்க வேண்டாமே என்று கினேத்தேன். உன் அம்மா ஒரேயடியாக ஒன்றும் கூடாது என்று சொல்லுகிருள். அந்தக் குழக்கை என்று வேருக வைத்துப் பேசுகிறீர்களே. அவள் எப்போது நம் அகத்துப் பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டாளோ அப் போதே அவள் நம் குடும்பத்தைச் சேர்ந்துவிட்டாள். நம்முடைய சுக துக்கங்களில் அவளுக்கும் பங்கு உண்டு’ என்று வாதாடுகிருள். அடுத்த வருஷம் இரட்டைப் பங்கா கப் பண்ணச் சொல்லுங்களேன். மாசியம் பண்ணின கை யோடே தீபாவளி விருந்து சாப்பிட உங்களுக்கு மனசு வருகிறதா?’ என்று கேட்கிருள். எல்லோரும் சந்தோஷ மாகச் சேர்ந்து கடத்த வேண்டிய இந்தக் காரியத்தை அரைகுறை மனசோடும் சச்சாவோடும் செய்வதில் என்ன பிரயோசனம் ? இதையெல்லாம் உத்தேசித்து உன் மாம குருக்கு நான் சமாதானமாகக் கடிதம் எழுதிவிட்டேன்.'

- இதுதான் அவன் தகப் புனர் எழுகிய கடிதம். தகப்ப ஞரின் அது காபத்தைக் கண்டு அவனுக்கு ஆறுதல் ஏற் பட்டாலும் அம்மாவின் பிடிவாதத்தை கிளேக்க கினைக்க எரிச்சலாக வந்தது.

'துக்கம் கொண்டாடுவது என்ன வேண்டியிருக் கிறது. பாட்டி உயிரோடு இருந்தபோது அவளை இந்த அம்மா படுத்தி வைத்த பாடு கடவுளுக்கே சகிக்காது. இப் போது துக்கம் வந்துவிட்டதாம், துக்கம்! கனிந்த பழம் உதிர்வதுபோல அந்தக் கிழவி போய்ச் சேர்ந்தாள். அவள் இன்னும் இருந்து ஒரு நாளை க்கு இாண்டு சச்சரவு கடக்க வேண்டுமென்று அம்மா கினேக்கிருளா, என்ன? இக்தப் போலி வேஷம் எதற்கு என்று கேட்கிறேன். தன் அருமை மாமியார் செத்துப்போன துக்கத்துக்காக, இவள் என்ன செய்துகொள்ளவில்லை? போன மாசங் தானே, பவுன் விலை ஏறியிருக்கிறதே என்று கொஞ்சங்

கூட நினைக்காமல், பணத்தைக் கொட்டிப் பத்துப் பவுன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/45&oldid=535286" இலிருந்து மீள்விக்கப்பட்டது