பிச்சைக்காரி
1
உடம்பு முழுவதும் புண்ணுடன் குழந்தை விரிட்டுக் கத்திக்கொண் டிருந்தது. அதன் தாய் பாலில்லாத மார்பில் அதை அணைத்துக்கொண்டு என்ன பிரயோ சனம் ? ஒரு கணத்தில் அந்தக் குழந்தைக்கு வயிறு நிறையப் பாலூட்ட வேண்டுமென்றுதான் அவள் தாயுள் ளம் நினைத்தது. ஆனல் உடம்பில் வலுவில்லையே! அவள் வயிறு கிறையச் சாப்பிட்டால்தானே பால் சுரக்கும்? அவள் நான்கு நாளாகப் பட்டினி. வெற்றிலை பாக்குக் கடைக்குப் பக்கத்தில் அவள் கின்றுகொண்டிருப்பாள். அங்கே வரும் கனவான் யாராவது ஒரு சீப்பு மலைப் பழத்தை வாங்கி வெகு வேகமாக வாயில் ஒவ்வொன்ருக உரித்துப் போடுவான். கண்களை அகல விரித்துக்கொண்டு அதை அவள் பார்ப்பாள். ங் த மனிதன் அவள் பக்கம் கண்ணேத் திருப்புவான? திருப்பினுலும் அவள் உருவம் அவன் பார்வைக்குத் தட்டுப்படுமா என்ன
ஒவ்வொன்முக அவன் விழுங்கினல் அவளுக்கு எப் படிப் பசி தீரும்? பாவம்! மனசிலே அத்தனை பழத்தை யும் தானே தின்றதாகப் பாவனை செய்துகொள்வாள். நாக்கில் சிறிதளவு நீர் சுரக்கும்; அதோடு சரி. ஆனல் ஒரு விஷயத்தை அவள் கற்றுக்கொண்டிருக்கிருள். கனவான் கோலை உரித்துப் போட்டுவிடுவான். அதை எடுத்துச் சுவைப்பாள். அவளும் சரி, அந்தத் தோலும் சரி; சமூகத்தினாால் எறிந்துவிட்ட நிலையில் இருக்கும் வஸ்துக்கள்! இரண்டும் உறவாடுவது பொருத்தந்தான்ே? போதாக்குறைக்கு அவளுக்கு இந்தப் புண் சுமை, குழந்தை என்ற உருவத்தில் வந்திருக்கிறது. LD ITL