பக்கம்:அறுந்த தந்தி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அறுந்த தந்தி

இப்போது தெளிவாக ஞாபகத்துக்கு வந்தது. அவர்தாம் கூப்பிட்டிருக்க வேண்டும்.

அவன் தலை சுழன்றது ; கால் தடுமாறியது; கையுங் களவுமாக அகப்பட்ட திருடனப்போல மார்பு படபட வென்று அடித்துக்கொண்டது. அப்படியே பக்கத்தி லுள்ள ஹோட்டல் சுவரோடு சாய்ந்துவிட்டான்.

மூர்ச்சை தெளிந்து எழுந்தபோது அவன் ஹோட்ட லுக்குள் இருந்தான். யாரோ ஒருவர் விசிறிக்கொண்டிருக் தார். மெல்ல ஒவ்வொன்ருக கினேவுக்குக் கொண்டு வந் தான். அவன் உள்ளத்தில் அச்சம் ஆணியடித்தாற்போல் பதிந்துவிட்டது. அதிலிருந்து பயங்கரமான காட்சிகள் பீரிட்டன.

அருகில் இருந்தவர், விலாசம் விசாரித்துக்கொண்டு அவனே அவன் வீட்டில் கொண்டுபோய் விட்டுவர ஏற்பாடு செய்தார். அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அவ னேச் சும்மா விடவில்லை. ஜுரத்தைக் கொண்டுவந்து

விட்டது.

率 웅 - 洽

கிருஷ்ணமூர்த்தி ஐயர் ரெயிலில் ஏறினர். அவர் மன சில் சற்று முன் கண்ட காட்சியும் எறிக்கொண்டது. முதலில் அவருக்கு அங்கேயே அவனைப் பலிவைக்க வேண்டுமென்ற கோபம் வந்தது. ஆனல் வண்டியில் ஏறின. பிறகு கிதானமாக யோசித்தார். அவன் எதற்காக இப்படிச் செய்கிருன்? அவனுக்குப் பணம் எதற்கு? சம்பளப் பணம் கொடுக்க அவர் என்றைக்கும் தடை சொன்னதே இல்லையே!

பிச்சைக்காரியின் ஞாபகம் அப்போது அவருக்கு வந்தது. உண்மையும் புலப்பட்டது. ஆம், அவ னுக்குப் பணம் வேண்டும். பள்ளிக்கூடச் சம் பளத்துக்காக அல்ல; அவளுக்குக் கொடுக்க. அந்த விஷயத்தில் அவருடைய பணத்தான் அவனுக்குக் கிடைக்கவில்லையே! 'எங்கள் அப்பா ஏழை” என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/71&oldid=535312" இலிருந்து மீள்விக்கப்பட்டது