கார்த்திகை விளக்கு 75
காரியம் ஒன்று நிறைவேறினது போல் ஆகும். எனக்கு இப் படித் தோன்றுகிறது.”
"ஆசடே! நீ குழந்தை. உனக்கு ஒன்றும் தெரியாது. அதை நீ விளக்கென்று சொல்லுகிருயே. அதை ஏற்ருத தற்கு முன்பே நம் வீட்டில் இருட்டைப் புகுத் திவிட் டதே! பைத்தியம் மாதிரி பேசுகிருயே!' என்று துக்க உணர்ச்சியோடு தன் தாய் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட சீதாலக்ஷ்மி யோசனையில் ஆழ்ந்தாள். எப்படி யாவது, அந்த விளக்கை வெளியில் எடுத்து வைத்து ஏற்றத்தான் வேண்டுமென்ற ஆசை அவள் உள்ளத்தில் மேன்மேலும் பொங்கியது. திடீரென்று அவளுக்கு ஒன்று தோன்றியது.
'அம்மா, நமக்குள்ளே இந்த வாக்குவாதம் எதற்கு? பூரீ ராமசந்திர மூர்த்தியின் ஆக்ஞையையே தெரிந்து கொண்டு விடுவோம்’ என்று குதித்துக்கொண்டு
குதத துக சொன்னுள். - -
விசாலம் தன் உற்றுப் பார்த்தாள் ; ே என்ன உளறுகிருய்?' என்று சற்றுக் கடிந்து கடுமையான குரலோடு கேட்டாள்.
"ராமாயணத்தில் கயிறு சாத்திப் பார்க்கிறேன். நல்ல இடமாக இருந்தால் ராமசந்திரமூர்த்தியின் அதுக்கிரகம் உண்டாகுமென்று வைத்துக்கொண்டு விளக்கை ஏற்றலாம்; இல்லாவிட்டால் வேண்டாம்.' - -
விசாலம் திகைத்தாள். இந்தப் பேதைப் பெண்ணுக்கு எத்தனே ஆசை!” என்று ஆச்சரியப்பட்டாள். அவள் சொல்வது விசாலத்துக்குப் பொருத்தமாகவே பட்டது.
'சரி ; நீயோ கேட்கமாட்டேன் என்கிருய். கைகால் அலம்பிக்கொண்டு பகவானுக்குப் புஷ்பத்தைப் போட்டு ராமாயணத்துக்கும் அர்ச்சனே செய்து பிரித்துப் பார். ாாமசந்திரமூர்த்திதான் துணையிருக்க வேணும்.'