தீபாவளிப் புடைவை - 85
சலனம் அடைந்தது. சுந்தாம்மாளைக் கண்டபோது அவ ருக்குப் பேச நா எழவில்லை. இனிமேல் ஒரு புடைவை நெய்யலாம் என்ருலோ நாள் இல்லை. தீபாவளிக்கு இரண்டே நாட்கள் இருக்கின்றன.
பேச்சுச் சாமர்த்தியத்தால் ஒரு விதமாகத் தம் மனே வியை அந்த வருஷமும் சமாதானப்படுத்தினர். அவர் மனசு மட்டும் சமாதானமாகவில்லை. ‘எப்படியாவது அடுத்த வருஷம் உயர்ந்த புடைவை ஒன்று செய்து கொடுத்துவிடுவது' என்று தீர்மானித்துக்கொண்டார். அவளிடத்தில் உள்ள அன்பு மேலெழுந்தது. இரண்டு முறை அவளை ஏமாற்ற நேர்ந்தமையால் அவள் பால் அவ குக்கு அதிக இாக்கம் உண்டாயிற்று. எத்தன லாபம் வங் தாலும் சரி;தம்மோடு வாழும் இவளுக்கு இல்லாமல் வரும்
பணம் வேண்டாம்’ என்று உறுதி செய்துகொண்டார்.
இந்தத் தீர்மானத்தை அவர் மறக்கவில்லை. அடுத்த வருஷம் மற்ருெரு விஷயம் அவருடைய தீர்மானத்துக் குப் பலத்தைக் கொடுத்தது. சுந்தாம்மாள் கருத் தரித் தாள். இந்த நிலையில் இவளை ஏமாற்றுவது மகா பாவம் ! என்ற எண்ணம் முதலியாருக்கு உண்டாகி அவர் மனத்தை
உறுத்திக்கொண்டே இருந்தது.
புரட்டாசி மாதம் பிறந்தது. அவளுக்கு ஏழு மாதம் நிரம்பி எட்டாவது மாதம் பிறந்தது. ஆசாபங்கம் அடைந்த அவள் புடைவை விஷயத்தையே எடுப்பதில்லை. ஆசை காட்டாமல் காரியத்திலேயே காட்டவேண்டு மென்று எண்ணி முதலியாரும் அதைப்பற்றிப் பேச வில்லை. உயர்ந்த நால் வாங்கித் தம் தொழில் திறமையை எல்லாம் காட்டி ஒரு புடைவை நெய்து தம் ஆசைக் காத லிக்கு அளிக்கவேண்டும் என்று அவர் ஏற்பாடு செய்தார். அவள் அதைக் கட்டிக்கொண்டு அடையப்போகும் சங் தோஷத்தைக் கற்பனை செய்து பார்த்தார். அந்தச் சங் தோஷ மிகுதியால் அவளுக்குச் சுகப் பிரசவம் உண்டா