பக்கம்:அறுந்த தந்தி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அறுந்த தந்தி

தெரியவந்தது. எல்லோரும் நல்லபடியாக ஆகவேண்டுமே என்று கடவுளைப் பிரார்த்தித்துக்கொண் டிருந்தார்கள். கடைசியில் குழந்தை பிறந்தது; பெண் குழந்தை. சுந்தாம் மாள் அயர்ச்சியால் மெய்ம்மறந்து கிடந்தாள். உணர்வு வந்ததும் குழந்தையைப் பார்த்தாள். பிரசவக் டுகாளாறி ல்ை அவள் கிலை மாறியது. அப்போது முதலியார், தீபா வளிப் புடைவை செய்துகொண்டு வந்திருக்கிறேன்” என்ற செய்தியைச் சொல்லி அனுப்பினர். சுந்தாம்மாள் அபாய கிலையை அடைந்திருந்தாள். 'புடைவையைக் கருணும் பிகைக்குக் கொடுத்துவிடச் சொல்லுங்கள்' என்று பாதி கினேவோடு அவள் சொன்னுள். அதற்கு மேல் அவள் பேசவில்லை; எழுந்திருக்கவும் இல்லை.

'கருணும்பிகைக்கா!' முதலியார் இடி விழுந்து போளுர். 'தர்மகர்த்தா சாபம் இட்டுவிட்டார். ஐயோ! என் வாழ்வைக் குலேக்க வந்தானே!... நான்தான் மகா பாவி! இவள் மனசைப் போன வருஷமே திருப்திப்படுத்தி னேன? இவள் அம்பிகைக்குக் கொடுக்கும்படி சொல்லி விட்டாள். இவள் கடைசி ஆசையல்லவா அது? கர்ம கர்த்தாவும் அதைத்தானே சொன்னுர்?. . தெய்வம் செய்த சதியா இது? நான் செய்த அபராதத்துக்குத் தண் டனையா? தெய்வத்தை நான் நினே க்கவில்லை என்பதை இவள் சுட்டிக் காட்டி உபதேசம் போலச் சொல்லிவிட்டுப் போய்விட்டாளா? இப்படி எண்ணி எண்ணி மனம் புண்

ைைர். இனிமேல் என்ன செய்வது?

சுந்தாம்மாள் காரியத்தை முடித்துவிட்டுக் குழந்தை யைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லித் தீபாவளிப் புடைவையை எடுத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தார். முதல் காரியமாகத் தர்மகர்த்தா காலில் போய் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். ஸ்வாமி, நான் அன்பை உணரவில்லை. தெய்வத்தின் அருளையும் உணர வில்லை. காசு பெரிதென்று அன்பை உதறினேன். அன் புடையவன்போல நான் நடிக்கத் தொடங்கினேன். தெய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/95&oldid=535334" இலிருந்து மீள்விக்கப்பட்டது