பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12

மண்டி ஒடத் தமது பார்வை
வரம கிழ்ந்த திருவினர்
தண்டி யடிகள் கழல்கள் என்றும்
தழைக என்நெஞ் சதனிலே.

31. மூர்க்க நாயனர்

எந்தவகை யேனுமடி யார்களுண வேண்டி
அந்தவகைக் காகநிதஞ் சூதுவிளை யாடி
வந்தபொருள் எங்தையடி யார்க்குதவ வைத்த
சிங்தைதெளி மூர்க்கர் புகழ் செப்பிமகிழ்வேனே.

32. சோமாசி மாற நாயனார்

ஏரூரும் அம்பர் நகர்வாழ வந்த எழிலாளர்
சிரூரு நம்பர் மகிழ்வேள்வி செய்த மறையாளர்
ஆரூரர் காட்ட அரனரி னுடல் அதுகண்டோர்
நாரூரு நெஞ்சர் சோமாசி மாறர் நமையாள்வார்.

33. சாக்கிய நாயனார்

சைவ சமயமே மெய்ச்சமயம் ஆகும்
சங்கர னே ஒரு மெய்த்தெய்வம் ஆகும்
எவ்வ முறும்பிற சமயமென ஒர்ந்தே
இடைவெளி உள்ள தொர் விங்கமிசை அன்பால்
உய்வகை நேடியே கல்லெறிந்தே நித்தம்
ஒருமை மனத்துடன் அர்ச்சித்த மேலாம்
தைவிக வாழ்க்கைகொள் புத்தர்பிரான் நங்கள்
சாக்கிய ரைத் த்ொழல் பாக்கியமே கண்டீர்.


குறிப்பு : ஒவ்வொரடியிலும் ஈற்றுச் சிரை விட்டாலும் பாடல் அமையும்