பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21

60. திருநீலகண்ட யாழ்ப்பான நாயனார்

மாமது ரைப்பதியில் இறை சொற்வடி யிட்ட பொன்
மணை யிருந் திசை பல வகை வகை புகல்வர் ;
பூமகள் பூசை செயுங் கம லாலய ஊரினிற்
புது வழி வட திசை புகுபவர் தொழவே ;
காமரு காழியர்கோன் தமிழ்ப் பாடல்கள் யாழினிற்
கலந் திசை பொலிந் திடக் கலைதரு புலவர்;
வாமநன் மாமனத்தில் எழிற் சோதியிற் சேருமெய்
வழா தபா ணனுர் கழல் வழிபடல் குணமே.

61. சடைய நாயனார்

நம்பியா ரூரரைத்
தம்புதல் வன்னெலும்
எம்பிரான் சடையரை
நம்பி நான் நாடுவேன்.

32. இசை ஞானியார்

அசையாத அன்பரா ரூாரின்
இசையேறும் அன்னையா ரென்னுமவ்
விசைஞானி யார்புகழ் என்றுமே
நசையோடும் என்னுளம் நாடுமே.