பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



துதிப்பா - கருத்து
காப்பு

திருநிறை செல்வராம் அறுபத்துமூவர் சிறப்பைப்பா வகையாற் கூறக் கஜமுகா சுரனே அட்ட ஆனைமுகப் பெருமனது பேரருளே துணையாகும்.

1. திருநீலகண்ட நாயனார்

"நீலகண்டம” என்னும் ஆணையில் வைத்த அச்சமும் அன்புங் காரணமாகத் தமது மனைவியைத் தொடாது நீத்து, மறைந்த ஓட்டு வழக்கின் பயனாக இளமைப் பருவத்தை (இறைவன் அருளால்) அடைந்த திருநீலகண்டரின் தாளினையைச் சிந்திப்பாம்.

2. இயற்பகை நாயனார்

இல்லை என்ற சொல் தம்மிடத்தில் இல்லை என்னும் படியாக, "உமது இல்லாளைத் தருக எனக் கேட்ட பெருமானுக்கு இல்லை என்னாது தம் மனைவியைக் கொடுத்த" இயற்பகை நாயனாரை ஏத்துவாம்.

3.இளையான்குடி மாற நாயனார்

அடியாருக்கு உணவளிக்க வேண்டி மின்னலிலும் மழையிலும் சென்று செந்நெல் கொண்டுவந்து பலவித கறிகள் செய்க எனத் தமது ம்னைவி கையிற் கொடுத்த இளையான்குடி மாறனாரது திருக்கழளைப் போற்றிப் பணிவாம்.