பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29
8. ஏனாதிநாத நாயனார்

போரில் வந்து எதிர்த்தவனும் திருநீறு இடாதவனுமான அதிசூரன் என்பான் திருநீறு இட்டிருந்ததைக் கண்டவுடன் அவனுடன் போர் புரியாது அவன் கையால் தமது உயிரையே இழந்த உண்மைப் பத்தரும், திருநீறே சார்பாம் செல்வமாம் என்னப் பாராட்டி வந்த அருமைக் குணத்தவருமான ஏனாதிநாதரது பெருமையைப் பேசுவாம்.

9. கண்ணப்ப நாயனார்

தாம் அன்பு வைத்தஅ ண்ணலது கண்ணில் குருதி வரக் கண்டு தரியாது தவித்து இரங்கி, ஒரு சிறிதும் தாழாது தமது கண்ணையே பறித்து அப்பின பெருமையாளராங் கண்ணப்பரது பாதமலரை ஏத்தி வாழ்த்துவாம்.

10. குங்கிலியக் கலய நாயனார்

தம்மை வறுமை வந்து சூழ்ந்த போது, மனையாளது தாலியை மாற்றி வந்து பொருள் கொண்டு குங்கிலியம் வாங்கித் தமது குங்கிலியப புகைத் தொண்டை வழுவாது நடத்தினவரும், திருப்பனந்தாளில் பெருமானது திருவுருவம் சாய்ந்திருந்ததை நிமிர்த்தி வைத்த நீள் தவத்தினருமான குங்கிலியக் கலய நாயனாரைக் கருதிப் புகழ்வாம்.

11. மானக் கஞ்சாற நாயனார்

தமது புதல்வியின் திருமண நாளில் வந்த முநிவர் 'இம்மண மகளின் கூந்தல் பஞ்ச வடிக்கு உதவும்' என்று கூற, உடனே வாள் கொண்டு மகளின் கூந்தலே