பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உ திருச்சிற்றம்பலம் காரைக்காலம்மையார் அருளிச்செய்த அற்புதத் திருவந்தாதி சிவபெருமான் திருவருளால் 'வானமும் மண்ணு மெல்லாம் வணங்குபேய் வடிவம்' பெற்ற காரைக்கால் அம்மையார் முதன் முதல் திருவாய் மலர்ந்தருளிய சிறப்புடைய பிரபந்தம் அற்புதத் திருவந்தாதி என்பதாகும். அற்புதம் என்பது யாவரும் வியந்து போற்றுதற்குரிய உணர்வரிய மெய்ஞ்ஞானம் என்ற பொருளேத் தருவதாகும். 'அற்புதமூர்த்தி’ எனவரும் நன்னூற் சிறப்புப் பாயிரத் தொடர்க்கு ஞானமே திருமேனியாகவுடையான்’ என எழுதப் பெற்ற உரைப்பகுதி இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். இறைவனருளால் தம் உள்ளத்தில் தோன்றிய சிவஞானத்தின் ஒருமைப்பாட்டினால் உமையொருபாகனாகிய இறைவனது பொருள்சேர் புகழை விரித்துப் போற்றிய அந்தாதியாதலின், இஃது அற்புதத் திருவந்தாதி யென்னும் பெயர்த்தாயிற்று. இந்நுட்பம், 'உற்பவித்தெழுந்த ஞானத்தொருமையின் உமைகோன்தன்னே அற்புதத் திருவந்தாதி அப்பொழு தருளிச் செய்வார்’ (காரைக்காலம்மையார் புராணம் 52) எனவரும் பெரிய புராணத் தொடரால் இனிது புலனாதல் காணலாம்.