பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

கூறப்பட்டது. பெறற்கரியனாதல்-பெறுதற்கரிய சிவ பரம் பொருளோடு ஒன்றித்து நின்று பணி புரிதல், ஏகனாகி இறைபணி நிற்றல் என்பர் மெய்கண்டார். அனற்கு-அனலை ; உருபு இயக்கம். அனல் கம் கையேற்றான் எனப் பிரித்து நெருப்பையும் தலை யோட்டினையும் கையில் ஏந்தியவன் எனப் பொருள் கூறலும் பொருந்தும். அருள்-அருளால் என மூன்றாமுருபு விரித்துரைக்க,

அருளே யுலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளு மாவ தெனக்கு. (9)

இ-ள் : சிவசக்தியாகிய திருவருளே உலகம் எல்லாவற்றையும் ஆள்விப்பதாகும். உயிர்களின் பிறவிப் பிணிப்பினை வேருடன் அறுத்தொழிப்பதும் அவ்விறைவனது திருவருளே என்பதனை உளங் கொள்வேனானால் திருவருளாகிய அதன் துணை கொண்டேமெய்ப்பொருளாகிய முதல்வனை உள்ளவாறு கண்டு வழிபடும் நற்பேறுடையனாவேன். அடியேற்கு எக்காலத்தும் எல்லாப் பொருளாகவும் நின்று துணைபுரிவது அத்திருவருளேயாகும்.

விதி-நல்லூழ்.

எனக்கினிய வெம்மானை ஈசனை யான் என்றும்
மனிக்கினிய வைப்பாக வைத்தேன்-எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே யின்புற்றேன்
உண்டே யெனக் கரிய தொன்று . (10)