பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே பிறரறியும் பேருணர்வுந் தாமே - பிறருடைய என்பே யணிந்திரவிற் றியாடு மெம்மானுர் வன்பேயுந் தாமு மகிழ்ந்து. (30) இ~ள் அன்பரல்லாத பி ற ர | ல் அறிய வொண்ணுத பெருமையுடையவரும் அவ்விறைவரே. அவர்களிற் பிறராகி அருட் கண்ணுடையோராகிய அன்பர்கள் அறிந்து மகிழவல்ல ஞானத் திரளாய்த் திகழ்பவரும் அவரே. எம்பெருமானுகிய அம்முதல்வர் (தம்முடன் வைத்து மூவரென்றே யெண்ணி யிறந் தொழிந்த) ஏனையிரு வருடைய எலும்புகளே யணிந்து வலியபேயும் தாமுமாக இரவில் தீயில் நின்று மகிழ்ந்து ஆடியருள்வர். எ-று (முதலடியில்) பிறர் புறச்சமயத்தார். (இரண்டா மடியின் முதலில்) பிறர் . அவரொடு தொடர்பில்லாத மெய்யடியார்கள். (தனிச்சொல்வாய் வந்த) பிறர் . படைத்தலேயும் காத்தலேயும் மேற்கொண்டமையால் தம்மை இறைவைெடு வைத்து எண்ணிச்செருக்குற்ற ஏனே அயன் அரிஎன்னும் இருவர். மகிழ்தி மடநெஞ்சே மானுடரி னியுந் திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே யாரென்பே யேனு மணிந்துழல்வார்க் காட்பட்ட பேரன்பே யின் னும் பெருக்கு, (31) மடமை பொருந்திய நெஞ்சமே, மக்கட் பிறப் பினருள் ஒருவர்க்குரிய நெஞ்சமாக விளங்குகின்ருய் ஆதலால் (எனது நெஞ்சமாகிய) நீயும் பெரிய