பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 மேகத்தைக் கொண்டு செய்ததுபோன்ற கரிய திரு மேனியை யுடையவனும், நின் திருமேனியின் வலப் பாகத்தில் விளங்குபவனும் ஆகிய திருமால் நின் திருவடியைத் தேடிய அந்நாளில் அப்பெரியோன் காணுவண்ணம் நீ எவ்விடத்தே ஒளிந்திருந்தாய்? ‘ஒருருவாய் நின்னோடு உழிதருவான்’ என்பதற்கு "நீ மேற்கொண்ட பிச்சைக் கோலத்திற்கு இயைய ஒத்த மோகினி யுருவத்தினே ேம ற் கொ ண் டு நின்னுடன் தாருகா வனத்தில் திரிவான்’ எனப் பொருளுரைத்தலும் பொருந்தும். நின்னுடைய பாகத் தான் காணுமே பண்டு எங்கொளிந்தாய் எனக் கூட்டுக. பண்டமர ரஞ்சப் படுகடலி னஞ்சுண்டு கண்டங் கறுத்ததுவு மன்றியே-யுண்டு பணியுறுவார் செஞ்சடைமேற் பான்மதியி னுள்ளே மணிமறுவாய்த் தோன்றும் வடு. (55) இ-ள் : மு ன் .ெ ைரு காலத்தில் தேவர்கள் கண்டு அஞ்சியோடும்படி கடலிடத்தே தோன்றிய ஆலகால நஞ்சினே இறைவர் உண்டடக்கியதனுல் அவரது திருமிடறு கறையினே யெய்தியதோ டன்றி பாம்பணிந்த நீண்ட சிவந்த சடையின்மேல் விளங்கும் பால்போலும் நிறத்தினையுடைய மதியினுள்ளே அழகிய கறையாகத் தோன்றும் வடுவும் உண்டு எ-று. நஞ்சம் உண்டதனுல் இ ைற வ ர து கண்டம் கறுத்ததோடமையாது அவர் சடைமேற் சூடிய மதி யிலும் மறுவாகிய வடுவுண்டாயிற்று என விடத்தின் கொடுமையினே மிகுத்துக் கூறியவாறு. க ண் ட ங்