பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 ஒத நெடுங்கடல்கள் எத்தனே யும் உய்த்தட்ட ஏதும் நிறைந்தில்லை யென்பரால்-பேதையர்கள் எண் ணு திடும் பலியால் என்னே நிறைந்தவா கண் ணுர் கபாலக் கலம். (74) இ-ள் : நெற்றிக் கண்ணுடைய இறைவர் ஏந்திய கபாலமாகிய பலிப் பாத்திரம் அலேகள் ம்றியுமியல்பின வாகிய எத்தனையோ பெருங்கடல்களின் நீரைக் கொண்டு பெய்தாலும் சிறிதளவும் நிரம்பாத பெருமை யுடையதென்று (அவரது திருவருள் பெற்ற) சான்றேர் கூறுவர் அங்ங்னமாகவும் (தாங்கா வ ன த் தி ல் வாழ்ந்த முனிவர்களின் மனேவியராகிய) பேதையர்கள் தம்முணர்விழந்து பெய்த சிறிய பலிப்பொருளால் நிறைந்திருத்தல் எவ்வாறு ? பிரம கபாலமாகிய அதனே நிரப்புதல் வேண்டும் என்ற எண்ணத்துடன் கடல்களின் பெரும் புனலயே கொண்டு வந்து நிரப்பிலுைம் நிரம்பாத பெருமை வாய்ந்த உண்கலம் அது. அதனே நிரப்ப வேண்டு மென்ற கருத்தின் றிப் புறத்தே சிந்தும் நிலையில் தாருகா வனத்து மகளிர் இட்ட சிறிய பிச்சைப் பொருளால் அது நி ைற த ல் கூடுமோ 6Ꭲ 6Ꮘ}" அம்மையார் வினவியவாறு. ஒ .ே ட ந் தி ப் பிச்சை யேற்கும் வடிவுடன் இறைவன், எழுந்தருளியது தமது உண்கலத்தை நிறைத்தற் பொருட்டன்றென்றும் எவ்வுயிர்க்கும் உயிர்க்குயிராய் உள் நின்றருளும் முழு முதற்கடவுளாகிய தன்ன அறியாமையால் எண்ணு திகழ்பவரும் எண்ணி உய் திபெறுதற் பொருட்டே இறைவன் இங்ங்னம் ஒடேந்திப் பலிதிரிகின்ருன் என்றும் அம்மையார் இத்திருப் பாடலில் உய்த்துணர கவைத்தபை உணர்ந்து மகிழத்தக்கதாகும்.