பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பிற தெய்வங்களுக்கில்லாத நெற்றிக் கண்ணினே த் தமக்கேயுரியதாகக் கொண்டமையால் கண்ணுர்’ என்பது சிவபெருமானுக்குரிய திருப்பெயராயிற்று. இனி, எவ்வுயிர்க்கும் கண் போன்று எப்பொருளேயும் காட்டியருள்செய்ய வல்லவராதலின் க ண் ணு ர் என்பது இறைவனுக்குரிய பெயராயிற்று எனக் கொள்ளுதலும் பொருந்தும். கண் ணர் என்ற பெயர் சிவபெருமானுக்குரிய தென்பதனேக் க ண் ணு ர் கோயில்’ என் வழங்கும் உல க வழக்கிலுைம் இனிதுணரலாம். இனி, கண்ணுர் என்பதைப் பிரம தபாலத்திற்கு அடையாக்கி, கண் ஆர்-இடம் அகன்ற, கண்கள் பொருந்திய எனப் பொருளுரைத்தலும் உண்டு. அட்ட-பெய்ய, ஏதும்-சிறிதும். நிறைந்த தில்லே யென்பது நிறைந்தில்லே யென நின்றத். கலங்கு புனற்கங்கை யூடாட லாலும் இலங்கு மதியியங்க லாலும் நலங்கொள் பரிசுடையான் நீண் முடிமேற் பாம்பியங்க லாலும் விரிசடையாங் கானில் விசும்பு. (75) இ-ள் : எல்லா நலங்களேயும் தன்னகத்தே கொண்டு திகழும் இயல்புடையானகிய இறைவனது நீண்ட முடிமேல் விரிந்து தோற்றும் செஞ்சடையினே க் கருதி நோக்குவோமால்ை, அது, புனல் நிறைந்த கங்கையாறு இடையே பரவியோடுதலாலும் நில வொளி வீசும் பிறைமதி இயங்குதலாலும் பாம்பு இயங் குதலாலும் விசும்பினே யொத்து விளங்குவதாகும். கங்கையும் திங்களும் பாம்பும் இயங்குதல், இறை வனது சடைக்கும் விசும்புக்கும் அமைந்த பொதுத் தன்மை. விசும்பில் இயங்கும் பாம்பு-இராகு கேதுக் களாகிய கோள்கள். நலங்கொள் பரிசு உடையான்