9
காந்தச் சிலை, காதல் வலை, வீசும் நிலை பாருங்க!
கனவு இல்லைங்க- நினைவு தானுங்க!
கணமேனும் வீண்காலம் கழிக்காதீங்க!
(சலாம் பாபு)
மாசில்லா அழகாலே ஆனந்த மூட்டியே!
வானவில்லில் காணாத வர்ணஜாலம் காட்டியே!
ஜொலிக்கும் உடை, தளுக்கு நடை
மயக்குமுகம் பாருங்க!
சொந்தங் கொண்டாலே, இன்பம் உண்டாகும்
கணமேனும் வீண்காலம் கழிக்காதீங்க!
(சலாம் பாபு)
மார்ஜியானா - தொகையறா.
உன் - செல்வத்தைக் கண்டதால்
சிந்தாபாத் கூறியே செவியாற வாழ்த்துகின்றார்
உன் - உள்ளத்தைக் கண்டதால் உயிர்க்காதல்
கொண்ட நான் உருகியே வாழ்த்துகின்றேன்.
பாட்டு
என்னை-அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி அமீர் பூபதி-என் இன்ப வாழ்க்கைத் தேரின் சாரதி
(என்னை)
சிந்தை தன்னைக் கவர்ந்து கொண்ட சீதக்காதியே!
திராக்ஷை போல இனிக்கப் பேசும் ஜீவஜோதியே!
சிங்கார ரூபமாறனே என் வாழ்வின் பாதியே!
(அமீர்)
இருதுருவம் நமது வாழ்வு இந்த உலகிலே-இரண்டும்
ஒன்றாய்ச் சேர்ந்ததினால் இன்ப நிலையிலே!
என் இதய வானில் புதுமையான ஒளியும் வீசுதே!
(அமீர்)