பக்கம்:அலிபாபாவும் 40 திருடர்களும்.djvu/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலிபாபாவும்
40 திருடர்களும்

பாக்தாத் தேசத்தின் ஆடலழகி மார்ஜியானா! மனதைக் கொள்ளை கொள்ளும் அவள் ஆட்டத்திலே, மக்கள் பரவசமடைந்திருக்கும் சமயத்தில், அமீர் காசீம் கானின் தளபதி ஷேர் கான், அவளை அரண்மனைக்கு இழுத்துச் செல்ல முயலுகிறான். அந்தச் சமயத்தில் அலிபாபா குறுக்கிட்டு, ஷேர் கானை விரட்டியடிக்கிறான். - அலிபாபா அமீர் காசீம் கானின் உடன் பிறந்தவன். அமீரால் வஞ்சித்து விரட்டப்பட்டவன். அலிபாபாவின் தீரத்தைக் கண்டு, மார்ஜியானா தன் மனதைப் பறி கொடுக்கிறாள்.

தங்கை ஆயிஷாவின் விருப்பப்படி, மார்ஜியானாவையும், அவளது சகாவான தௌலத்தையும் தன் வீட்டிலேயே தங்கி இருக்கச் செய்கிறான் அலிபாபா. ஒரு நாள் விறகு வெட்டுவதற்காக, அலிபாபாவும், தௌலத்தும் காட்டுக்குச் செல்கிறார்கள். எதிர்பாராத விதமாக, கள்வர் தலைவன் அபு ஹுசேன் குகையைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். அந்தக் குகையின் சூட்சம வாசலைத் திறக்க, அபு ஹுசேன் உபயோகிக்கும் “மாய வார்த்தை”யையும் அலிபாபா மறைந்திருந்து, கற்றுக் கொள்கிறான்.

அபு ஹுசேன் தன் ஆட்களுடன் அப்பால் சென்றதும், அலிபாபா அந்தக் குகைக்குள் நுழைகிறான். அங்கிருந்த அளவற்ற செல்வக் குவியலைக் கண்டு பிரமித்து போன அலிபாபா, தௌலத்தின் உதவியுடன், ஏராளமான பொன்னை மூட்டை கட்டிக் கொண்டு புறப்படுகிறான்……

அலிபாபா பெரும் பணக்காரனாகி, ஏழை பங்காளனாக கீர்த்தியுடன் விளங்குகிறான் என்ற செய்தி, பணப் பேராசை பிடித்த அமீர் காசீம் கானுக்கு எட்டுகிறது. அலிபாபா எப்படி அவ்வளவு பொருள் தேடினான் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற தீய ஆசையுடன், அமீர் காசிம் கான் தீய ஆசையுடன் நயவஞ்சகமாக, அவனை விருந்துக்கு அழைக்கிறான். விருந்தின் மறைவிலே விரிக்கப் பட்டிருக்கும் வஞ்சக வலையை அறியாத அலிபாபா, தன் சகோதரி ஆயிஷா, மார்ஜியானா, தௌலத் ஆகியோருடன் விருந்துக்குச் செல்கிறான். அண்ணனின் கபட நாடகத்தில் மயங்கிய அலிபாபா, “மாய வார்த்தையை” அவனுக்குச் சொல்லி விடுகிறான். உடனே, அலிபாபா தன்னைக் கொல்ல வந்ததாக அபாண்டப் பழி சுமத்தி, அவனைக் கைது செய்து, மரண தண்டனை விதிக்-