பக்கம்:அலிபாபாவும் 40 திருடர்களும்.djvu/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

ஜில்ஜில் என்று ஆடிக் கொண்டு வா பொன்வண்டே!
கிட்டே வா பொன்வண்டே!

புல்புல்:- கொஞ்சிக் கொஞ்சிப் பேச வந்த கோமாளி ராஜா !
……ஏ கோமாளி ராஜா !
கெஞ்சிக் கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா !
……நீ செய்யாதே தாஜா ! (சின்னஞ்)

புல்புல்:- சிட்டு என்றும் பட்டு என்றும் யாரை ஏய்க்கப் பாக்கறே?
நீ யாரை ஏய்க்கப் பாக்கறே?

தௌலத்:- தட்டாதே என் சொல்லை தௌலத் உன்னை ஏய்க்கப்
பாக்கல்லே! ஹா…… உன்னை ஏய்க்கப் பாக்கல்லே

புல்புல்:- கட்டிக் கொள்ளு முன்னே நம்ப மாட்டா புல்புல்லே
நம்பமாட்டா புல்புல்லே !

தெளலத்:- சின்னஞ்சிறு சிட்டே கொஞ்சம் கிட்டே வாயேண்டி!
நீ கிட்டே வாயேண்டி !
சீமான் எந்தன் நெஞ்சைத் தொட்டுத்தாம் பாரேண்டி!
தொட்டுத்தாம் பாரேண்டி !

புல்புல்: - நம்பச்செய்து ஓடிப் போனா நானென்ன செய்வது!
நானென்ன செய்வது !

தெளலத்:- நல்லாயில்லே எந்தன் மேலே சந்தேகம் நீ கொள்வது !
வீண் சந்தேகம் நீ கொள்வது !
அல்லா மேலே ஆணையுன்னை நிக்காஹ் செய்வது (கொஞ்சி)