பக்கம்:அலிபாபாவும் 40 திருடர்களும்.djvu/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

பணம் படைத்தவரின் சொல்லைக் கேட்டு-
அதுக்குத் தாளம் போட்டு-பலர்
பல்லிளித்துப் பாடிடுவார் பின்பாட்டு
எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு (நாம் ஆடு)

மார்ஜியானா

உன்னை விடமாட்டேன்
உண்மையில் நானே!
கபடமெல்லாம் கண்டு கொண்டேனே!
முன்பே தானே! (உன்னை)

பெண்ணை லேசாய் எண்ணிடாதே!
பேதையென்று இகழ்ந்திடாதே!
அன்பு செய்தால் அமுதம் அவளே!
வம்பு செய்தால் விஷமும் அவளே!
இன்பக் காதல் இழக்க நேர்ந்தால்!
கொஞ்சங்கூட பொறுக்க மாட்டாள்! (உன்னை)

பொங்கும் கடலின் ஆழம் தன்னைப்
புரிந்து கொள்ளல் மிகவும் எளிது!
பெண்கள் நெஞ்சின் ஆழம் தன்னை
இங்கு யாரும் காணல் அரிது!
மானைப் போலே காணும் மங்கை!
வர்மம் கொண்டால் பாயும் வேங்கை? (உன்னை)

குலாம் - தொகையறா.

அல்லாவின் கருணையாலே
சொல்லாமல் வந்ததே யோகம்!
உல்லாச ராஜ யோகம்
உன் வாழ்விலே உண்டாகும்!

பாட்டு

உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா!
செய்யடா!