பக்கம்:அலிபாபாவும் 40 திருடர்களும்.djvu/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

செய்யடா!
நீ ஜல்ஸா—செய்யடா!
செய்யடா!
செய்யடா! (உல்லாச)

கொடுக்கிற தெய்வம் வலுவில் வந்து……
கூரையைப் பிரிச்சுக் கொட்டுமடா!!
கெடச்சதை நீயும் வாரியிறைச்சா
கிட்டாத சுகமே இல்லையடா!
செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே (செய்யட)

மீசை நரைச்சுப் போனதினாலே……
ஆசை நரைச்சுப் போய் விடுமா?
வயசு அதிகம் ஆனதினாலே
மனசும் கிழமாய் மாறிடுமா?
காசிருந்தா அதை அனுபவித்திடணும் (செய்யட)

பைசாவைக் கண்டா நைஸாகப் பேச
பல ரகப் பெண்கள் வருவாங்க.
பக்கத்தில் வந்து ஹுக்காவைத் தந்து
பாடியாடி சுகம் தருவாங்க!

பட்டான மேனி பட்டாலே இன்பம்
மெய்யடா
மெய்யடா
மெய்யடா

டான்ஸ் பாட்டு

ஓ…சலாம் பாபு! சலாம் பாபு! என்னைப் பாருங்க
தங்கக் கையினாலே காசை அள்ளி வீசுங்க! (சலாம்)

தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே!
தன்னாலே உண்டாக கண்ணாலே பேசியே!