பக்கம்:அலிபாபா.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உச்சிவரை அடுக்கப்பெற்றிருந்தன. அவற்றுடன், எத்தனையோ தோற்பைகளில் பொற்காசுகளும் வெள்ளி நாணயங்களும் மின்னிக் கொண்டிருந்தன. அவைகளையெல்லாம் கண்ட அலிபாபா பல தலைமுறைகளாகத் திருடர்கள் சேர்த்து வைத்திருந்த செல்வங்களாகவே அவை இருக்க வேண்டும் என்று எண்ணினான். ஏனெனில், ஒரே தலைமுறையில் அவ்வளவு பொருள்களைச் சேர்க்க முடியாது.

அலிபாபா குகையினுள்ளே நிற்கையில் வெளியேயிருந்த பாறை தானாகவே வாயிலை அடைத்துக் கொண்டது. ஆனால், அவன் அதைப்பற்றி கவலைப்படவேயில்லை. வாயிலைத் திறப்பதற்கும் அடைப்பதற்கும் உரிய மந்திரத்தை அவன் நன்றாக நினைவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/12&oldid=509387" இலிருந்து மீள்விக்கப்பட்டது