பக்கம்:அலிபாபா.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4
மார்கியானாவின் மதிநுட்பம்


திருடர் தலைவன் மேற்கொண்டு சாதாரண ஆள்களை அனுப்பி ஏமாறக்கூடாது என்று கருதி, தானே நகருக்குள் சென்று, முஸ்தபாவின் உதவியால் அலிபாபாவின் வீட்டைத் தெரிந்து கொண்டான். வீட்டைக் காட்டும் வேலையிலேயே முஸ்தபாவுக்கும் பல பொற்காசுகள் சேர்ந்துவிட்டன. தலைவன் அந்த வீட்டில் அடையாளம் எதுவும் செய்யாமல், படம் பிடித்து வைத்துக்கொள்வது போல், அதை நன்றாக மனத்திலே பதிய வைத்துக் கொண்டு, திரும்பிச் சென்றான்.

மூன்று நாள்களுக்குப் பின்பு இரவில் முப்பத்தெட்டுத் திருடர்களும் நகருக்குச் சென்று, குறித்த வீட்டை அடைய வேண்டுமென்று திட்டம் செய்யப் பெற்றது. திருடர் தலைவன், பத்தொன்பது கோவேறு கழுதை களையும், தோலினால் செய்த பெரிய தாழிகள் முப்பத்தெட்டையும் வாங்கிவரச்செய்து, அவைகளை ஆயத்தமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/44&oldid=512494" இலிருந்து மீள்விக்கப்பட்டது