பக்கம்:அலிபாபா.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

அலிபாபா


இருந்தது. பிறகு, அவன் ஒவ்வொரு தாழியாகச் சென்று தொட்டுப் பார்த்தான். எல்லாம் கொதிப்படைந்தே இருந்தன. எண்ணெய்த் தாழி மட்டும் குடில்லாமல் இருந்தது. உடனே, அவன் தன் தோழர்கள் அனைவருக்கும் நேர்ந்த கதியை உணர்ந்துகொண்டான். மேற்கொண்டு தானும் அங்கே தங்கியிருந்தால் ஆபத்து நேரும் என்று கருதி, அவன் அருகிலிருந்த சுவரின்மீது ஏறி, அடுத்த தோட்டம் ஒன்றிலே குதித்து அங்கிருந்து வெளியே தப்பி ஓடி விட்டான்.

எண்ணெய் வியாபாரி மாடியிலிருந்து இறங்கிக் கொட்ட கைக்குச் சென்றதுவரை மார்கியானா கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் அங்கே சென்றவன் நெடுநேரமாகத் திரும்பி வரவேயில்லை. அப்பொழுது, அவள் சந்தேகமடைந்து, மெதுவாகக் கொட்ட கைப் பக்க மெல்லாம் சென்று சுற்றிப் பார்த்தாள். அங்கே யாருமில்லை. தெருப்பக்கம் செல்லக்கூடிய கதவில் இரட்டைப் பூட்டுகள் பூட்டப்பட்டிருந்தன. ஆகவே, திருட்டு வியாபாரி சுவரேறிக் குதித்து வெளியேறிவிட்டான் என்று அவள் யூகித்துக் கொண்டாள். அன்று தான் பார்க்க வேண்டிய வேலைகளை வெற்றிகரமாக நிறை வேற்றியதில் அவள் மகிழ்ச்சியடைந்தாள். இனியாவது சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று எண்ணி, அவள் வீட்டிலே ஒருபக்கத்தில் தலையைக் கீழே சாய்த்தாள்.

பொழுது விடிவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே, அலிபாபா துயிலெழுந்து, அப்துல்லாவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/52&oldid=512501" இலிருந்து மீள்விக்கப்பட்டது