பக்கம்:அலிபாபா.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அலிபாபா


அவனுடைய உடைக்குள் ஒரு வாள் மறைத்து வைக்கப் பட்டிருப்பதையும் அவள் கவனித்தாள். ஒகோ இதற்காகத்தான் இந்தத் துரோகி உப்பு வேண்டா என்று சொல்லியிருக்கிறான்! உப்பிட்டவரைக் கொல்லக்கூடாது என்ற சாஸ்திரப்படி நடக்கிறான் போலிருக்கிறது! என் முதலாளியைக் கொல்லவே இவன் வந்திருக்கிறான். ஆனால், அதற்குமுன் இந்த நீசனையே பரலோகத்திற்கு அனுப்பி விடுகிறேன்! என்று அவள் தனக்குள்ளே எண்ணிக்கொண்டாள்.

அலிபாபாவும், ஹஸனும் உணவருந்தியபிறகு, அப்துல்லா மார்கியானாவை அழைத்து வந்தான். அவள் மேசைகளைத் துடைத்து, புதிதாக வந்த பழங்களையும், உலர்த்தி வைத்திருந்த கனி வகைகளையும் எடுத்து வைத்தாள். பின்னர், திராட்சையைப் பிழிந்து தயாரிக்கப்பெற்றிருந்த உயர்ந்த மதுவையும் , கிண்ணங்களையும் எடுத்து வைத்துவிட்டு, அவள் அப்துல்லாவை அழைத்துக்கொண்டு வேறு ஓர் அறைக்குள்ளே சென்றாள். அவர்கள் உணவருந்தப் போயிருப்பதாக ஹஸ்ன் எண்ணிக்கொண்டான்.

அப்பொழுது அவன் தன் காரியம் நிறைவேறும் தருணம் நெருங்கிவிட்டதை உணர்ந்தான். “என் வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ள இதுவே சமயம்! ஒரே வெட்டில் இந்தப் பயலைப் வீழ்த்தி விடுவேன்! இவன் அண்ணன் மகன் என்னைத் தடுக்கமுடியாது. அவன் தலையிட்டால், அவனையும் வாளுக்கு இரையாக்க வேண்டியதுதான்! ஆனால், இந்த வேலைக்காரியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/66&oldid=512511" இலிருந்து மீள்விக்கப்பட்டது