பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. யவனர் படையெடுப்பு

வட இந்தியா முழுவதையும் வென்று, மகதப் பேரரசை நிறுவி, வரலாற்றில் முதல் பேரரசர் என்ற பெயருடன் சந்திரகுப்தர் கி. மு. 327 முதல் 302 வரை 24 ஆண்டுகள் ஆண்டு வந்தார். அவருக்குப் பின் அவர் மைந்தர் பிந்துசாரரும் வீரப் போர்கள் புரிந்து 25 ஆண்டுகள் வெற்றியுடன் அரசுபுரிந்தார். அவரை யடுத்து, அவருடைய மைந்தர்களில் ஒருவரான அசோகர் அரியணை ஏறி, 41 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். அசோகர் காலத்தில் பாரத நாட்டின் நிலைமையையும், ஆட்சி முறையையும், நாகரிக நிலையையும் நன்கு புரிந்துகொள்வதற்கு அவருக்கு முன்னாலுள்ள வரலாற்றை ஓரளவு தெரிந்துகொள்ள வேண்டும். சந்திரகுப்தர் ஒரு பேரரசை அமைக்கத்தக்க நிலை எப்படி உருவாகியிருந்தது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

சந்திரகுப்தர் தம் குருவும் நண்பருமான சாணக்கியருடன் வனங்களில் அலைந்து கொண்டிருந்த காலத்தில்தான், இந்தியா மேலைநாட்டவரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஐரோப்பாவிலேயே கல்வி கேள்விகளிலும், நாகரிகத்திலும் அக்காலத்தில் முதன்மையாக விளங்கிய நாடு கிரீஸ் அந்நாட்டை நம்மவர் யவனம் என்றும், அந்நாட்டு