பக்கம்:அலைகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எங்கிருந்தோ வந்தேன்

 டி மிதிக்கையிலே வானம் குமுறுது-இல்லை, என் வவுத்தில் என் பசியின் குமுறல்.

பஞ்சடைஞ்ச என் கண்ணிலிருந்தே இத்தினி இருளும் புறப்பட்டு வந்து அந்தி மங்குதோ?

வாசற்படியில் தயங்கி நின்றான். பெரிய திண்ணையில் இரு உருவங்கள் இருளில் கோடு கட்டின.

அண்ணனும் தம்பியுமாட்டம் இருக்குது. பேசிகிட்டிருக்காங்க. சின்ன திண்ணையில் ஒரு சின்னப் பையன் முழங்காலைக் கட்டி குந்தியிருக்கான்.

மாடத்துலே அகல் சுடர், கண்ணைக் கசக்கி மனமில்லாமே முளிச்சுப் பார்த்து மங்கி மூச்சு விடுது.

"ஏ பண்டாரம் உனக்கு மூளையிருக்குதா? இன்னும் உலை காயுதோ இல்லியோ அதுக்குள்ளே உன் பஞ்சப் பாட்டுக்கு வேலை கண்டிருச்சா?”

"என்னண்ணா அந்த ஆளாடே கோவம்? கடலைக்காக் கொல்லையிலே குரங்கு இறங்கிட்ட உன் ஆத்திரத்துக்கு பிச்சைக்கு வந்த ஆண்டியா ஆளு?’’

தம்பியார் பேச்சு, பூவாலே அடிச்சாப் போல இருளிலே வந்து மெத்துனு இறங்குது. காதிலே மோதி நெஞ்சை ஒத்தி உதிருது. என் கண்ணோரம் தண்ணி-இல்லை சிலும்பல்றாவுது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/159&oldid=1272385" இலிருந்து மீள்விக்கப்பட்டது