பக்கம்:அலைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குண்டலி O 57

 "எனக்குந்தான் தெரியவில்லை. நீங்கள்தான் சொல்லுங்கோளேன்!" கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள். பார்க்கப் பரிதாபமாயிருந்தது. ஏன் இப்படி மாட்டிக் கொள்கிறோம்?

“சொல்லவோ செய்யவோ என்ன இருக்கிறது? வயிற்றுப்பாடில் மாட்டிக்கொண்ட பிறகு வருவதை வந்தபடி ஏற்பது தவிர!”

"இதுதான் உங்கள் பதிலா?”

நான் வேறு பேசவில்லை. இவளோடு எவன் பேசுவான்? இந்த நிமிஷத்துக்கு இவளையே எங்கேயோ எப்பவோ பார்த்த மாதிரிதான் இருந்தது.

அவள் உதடுகள் நடுங்கின. மரணத் தீர்ப்பு கேட்ட கைதிபோல் அவள் முகத்தில் அவயவங்கள் விண்டன. அப்படியே மேஜைமேல் சாய்ந்தாள். முழங்கை வளைவுள் முகம் கவிழ்ந்தது.

நான் தேற்ற முன்வரவில்லை. இப்போது அவள்மேல் எனக்கு இரக்கம்கூட வரவில்லை. 'அழு, அழு, நன்றாய் அழு. அலுப்பு உனக்கு மாத்திரம்தானோ? எனக்கில்லையா?'

வண்டி கிளம்பியாகிவிட்டது. மேட்டிலிருந்து பள்ளத்தில் இறங்குகையில் சரியும் சப்தம் தூரத்திலிருந்து எட்டுகிறது.

புத்தகங்களில் செய்யவேண்டிய பதிவுகளைச் செய்தேன்.

அகமுடையான் அடித்தாற்போல் பிழியப் பிழிய அழறாளே, யாராவது வந்தால்?

அந்தக் கவலையே வேண்டாம். அநேகமாய் அடுத்த வருஷத்துக்குள் இந்த ஸ்டேஷனை எடுத்துவிடுவார்கள் என்றே நினைக்கிறேன். எடுத்துவிடட்டும். எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/59&oldid=1287248" இலிருந்து மீள்விக்கப்பட்டது