பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாப்பூ ❖ 95

எவ்வளவு தூரமோ? இல்லை அவள் ஜோதிஸ்வரூபிணியே
தானோ? ராகதேவதை. அவள் பாராத பெண்ணுக்கு ராகத்
தின் பெயரைச் சூட்டிப் பார்க்கையில் வஸூவுக்கு மெய்
சிலிர்த்தது. லேசாகப் பயங்கூடக் கண்டது. எனக்குப் புரியாத
ப்ரதேசத்தில் காலை வைக்கிறேன். அபசாரம் நடக்கிறதோ?

கீழேயிருந்தபடியே அவனைச் சாப்பிட அழைத்து
அவன் இறங்கி வருகையில் காலையினும் அவன் திடீ
ரென்று மூதாகிவிட்டாற் போல் தோன்றியது. ப்ரமைதான்.
முகம் அப்படிச் சுண்டிப் போயிருந்தது.

லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், துஷ்யந்தன்
சகுந்தலை-இந்தக் காதல் ஜோடிகள் அமர காவியங்
களுக்குக் காரணமாயிருக்கலாம். ஆனால் யதார்த்தமே அற்ற
விட்டில் பூச்சிகள். அவர்கள் மேல் அவளுக்குச் சினம்
மூண்டது. இவனும் தன்னை ஒரு தேவதாஸாகப் பாவித்துக்
கொண்டு, தன் சோகத்தை அதையே ஒரு ரஹஸ்ய சுகமாய்
அனுபவிக்கிறானோ? உலகம் எப்படியெல்லாம் பாழாய்ப்
போய்க் கொண்டிருக்கிறது! எரிச்சலாய் வந்தது. அதுபற்றி
அவனிடம் பேச எடுத்த வாயை அடக்கிக் கொண்டாள்.
அவளுள் ஏதோ எச்சரிக்கை செய்தது.

அவன் அவளுடன் பேசவில்லை. சரியாய்ச் சாப்பிடக்
கூட இல்லை. ஏதோ கொறித்துவிட்டு மேலே போய்
விட்டாள். இதுவரை ஜாக்கிரதையாய் நினைவில் ஒதுக்கி
வைத்திருந்த ஜோதி மேல் அவள் கவனம் பின்ன
ஆரம்பித்தது.

“விட்டுட்டுப் போயிட்டா” என்றால் என்ன அர்த்தம்?
சகஜமாய் ஆண்களுடன் கொட்டமடித்துக் கொண்டு மேலே
இடிச்சுப் பேசி சிரிச்சுண்டு, ஆனால் உண்மையில் கல்மிஷ
மில்லாமல் இந்த நாளில் இந்த மாதிரி ரகத்தில் அவளும்
ஒருத்தியா? நான் கொஞ்சம் கட்டுப்பாடில் வளர்ந்தவள்.