பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பாப்பூ ❖ 99

ஆகணும். உடல் இச்சையை ஆத்ம ப்ரேமையாக உன்னத
மாக்கு என்று நீதி நூல்கள், வேதவாக்குகள் போதிக்கின்றன.
அது என்ன அவ்வளவு சுலபமா? அது அது அதனதன்
வேளையில் தானாகவே கனிவதுதான் நார்மல். நான்
டாக்டர். நான் எடுத்துக் கொண்டிருக்கும் ப்ரமாணம், என்
தொழில் கடைசி மூச்சுவரை தேக தர்மத்தைக் காப்பாற்று
வதுதான். தேக தர்மம் என்பது என்ன? நார்மாலிட்டி.
தெய்வீக நிலை-அதை சன்யாசிகள் அப்யஸிக்கட்டும்.”

ஸ்வேதா அடங்கினான். அவனுக்கு லேசாய் மூச்சு
இரைத்தது. வஸூ அவனை அதிசயத்துடன் பார்த்துக்
கொண்டிருந்தாள். இந்த ஆவேசத்தில் அவனைப் பார்த்த
ஞாபகம் இல்லை. திடீரென்று அவர்களைச் சூழ்ந்து
கொண்ட மோனம் விறுவிறுத்தது!

தட்டுக்களில் பண்டங்கள் ஆறிப் போய், சிலிர்ப்பு
கண்டுவிட்டன.

திடீரென்று காற்று கிளம்பி ஜன்னல் கதவுகள் படபட
வென அடித்துக் கொண்டன. புழுதியை வாரி முகத்தில்
இரைத்துக் கண்கள் உறுத்தின. இன்று காலையிலிருந்தே
புழுக்கம்தான். ருசியான மண்வாசனை அறையுள் புகுந்தது.

திடீரென மூளையுள் ஒரு வெறிச்சை உணர்ந்தான்.
மூளையுள் எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்
டிருக்கும் இயந்திரம் திடீரெனத் தோற்றுவிட்டாற் போல்,
பெருக்கித் துடைத்துவிட்டாற் போல்-மூளையுள் விசால
மான கூடம். மண்டை ‘கிர்ர்’-பயங் கண்டது. எழுந்து
நின்றால் விழுந்து விடுவேன். மூளைக்கு பிராணவாயு பாய
வில்லை. இது முடிவு என்பதா? மூளையின் சாவு.

கட்டிலில் படுத்தபடி பார்வை கூரையை வெறித்தது.
“ஜோதி” வா வா, உன் கை கொடு. இந்தப் பிலத்திலிருந்து