பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



1.
ராசாத்தி கிணறு

மலையிலிருந்து இறங்கி வீட்டு வாசற்படி ஏறும்போதே
இன்னிக்கு விபரீதம் நிச்சயம்னு தெரிஞ்சு போச்சு.
ஆனா மத்தநாள் ஒரு மாதிரியா வவுறு கதிகலங்கும். இன்னிக்கு
அப்படியில்லே. ஒரு மாதிரியா சுறுசுறுப்பா உற்சாகமாகவே
யிருந்தது. புரியல்லே.

அவள் புருஷன் சின்னத் திண்ணையில் குந்தியிருந்
தான். நெடுநெடுன்னு சாட்டை உருவம். வயது எழுபது.
அதுக்கு மேலே எத்தனியாச்சோ யார் கண்டது அவனுக்கே
வெளிச்சம் இல்லே. அவனுக்கே வெளிச்சமிருக்காது. கிராமத்
திலே அதெல்லாம் அப்பிடி எடைக்கணக்கிலே கண்டுக்க
மாட்டாங்க தெரியாது. ஏதோ குத்துமதிப்பிலிருக்கும். “ஐயா
போய் சேர்ந்துட்டாரு. எல்லாம் கணக்கிலேதான் போயிருப்
பாரு. அவனுக்குத் தெரியாதது நமக்கென்ன? என்று
மறைவைக் கண்டுகிட்டு வயதை மறந்து விடுவாங்க. ஆளும்
நாளடைவில் அவ்வளவுதான். போன வருடம் ஏர்ப்பிடிக்க
ஒரு ஆள் இருந்தது. இன்னிக்கு இல்லே. அதனால் என்ன?
பையன்தான் தயாராயிட்டானே இடத்தை நிரப்ப. ஆள்
வந்தாச்சு. தட்டுப்படாம வேலை நடக்குதா பாரு. “பையா
அப்பன் பேரை விளங்கப்பாரு. உன் அப்பன் சித்துளி
யாட்டம் இருப்பான். ஆனால் மத்தவங்களைக் காட்டிலும்
இரண்டங்குலம் ஆழம் கூடத்தான் இருக்குமே ஒழிய
குறையாது.”