பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
6
கொலு


அவள் வீடு திரும்பியபோது கதவு திறந்திருந்தது. அவர் உள்ளேயிருந்தார். வழக்கம்போல், ஈஸி சேரில் பேப்பர் பார்த்துக்கொண்டு. காலை வேளையில் தலைப்புகளைத் தவிர, விவரமாய்ப் படிக்க நேரமிருப்பதில்லை.

“எப்போ வந்தேள்? வந்து நேரமாச்சா?”

“என்ன சுண்டல் தண்டலா? ஏது, அமர்க்களமாயிருக்கே அலங்காரம்! Dressed to kill!”

“கொலு இல்லியா? தினப்படி போல் உடுத்திண்டு போமுடியுமா?”

“நல்லாத்தானிருக்கே, நேரே அம்பாளே கொலுப் பார்க்க வந்துட்ட மாதிரி!”

“கேலி பண்ணறேளே!” சந்தோஷம் முகத்தில் சிவப்பு குழுமியது. “No, no. ஏன் கேலி பண்ணனும்? நிஜமாத்தான், You are looking great.”

“போன இடத்திலேயும், எல்லாரும் அப்பிடித்தான் சொன்னா. ‘மாமி என்ன தேஜஸ்ஸாயிருக்கா பாருடி ன்னு.” தன்னை மேலிருந்து கீழ் நோட்டம் விட்டுக் கொண்டாள். “yes, வயது உனக்குப் பிரியம் காட்டறது. என்னைப் பார், தலை தேங்காய்த் துருவல் மாதிரி. சொட்டை வேறே