பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ❖ லா. ச. ராமாமிர்தம்





அவர்கள் வழி உயர்ந்தது. விவேகம் கொண்டது.
உழப்பல் இல்லாதது. மேல்காரியத்துக்கு அடுத்தாற்போல்
பிள்ளை வீட்டார் பெண் கேட்க வரும்போதுதான் விழித்துக்
கொள்வார்கள். ‘ஏலே நீ சோலைமலைப் புள்ளேயில்லே?
அஞ்சு தலைமுறையா ஒரே மவன்லேதானேயிருக்கே. என்
மவளை உங்க வீட்டிலே கொடுத்தால் ஒத்தைக்காச்சியா
வச்சுப்புடுவேய்யேன்னு கவலையாயிருக்குது. ஆனால்
உனக்கும் கலியாணம் ஆவணும். தப்புத்தண்ட்டா இல்லா
நிலம், நல்ல பூமி. என்னிக்குமே தோத்ததில்லே. எங்கியோ
யார் கண்ணுக்கும் அறியாமே பூமிக்கடியிலே ஊத்து பாயுது.

“நல்லா நிறைய மக்களைப் பெத்துக்கோப்பா. அப்பத்
தான் பயிர் பெருகும். நமக்குப் பயிர் பரம்பரைத் தொழி
லாப் போச்சு பாரு. இதுக்கு எத்தினி பேரு இருந்தாலும்
விதைக்கு நெல் வீசறப்போ, தண்ணி பாய்ச்சறதுலே, நாத்து
நடறதுலே, அறுப்புலே களத்து மேட்டுலே, நெல்லு தூத்தறத்
துல எத்தினிபேர் இருந்தாலும் காணாது. பெண்ணை சரியா
காப்பாத்துவே இல்லே? சரி, நாள் குறிச்சுடலாம்.”

‘இந்தா விபூதி குங்குமம் தரிச்சுக்கோ’ என்று பூ
வெத்திலை பழத்துடன் தட்டை நீட்டியபோது, அவனும்
சாதுவாத்தான் இரண்டையும் இட்டுக் கொண்டான்.

“இன்னும் குகையில், அந்த ஆளோட ஜல்ஸா
பண்ணிட்டுத்தானே வரே? இன்னிக்கு என்ன படையல்?”

“வாயிலே வந்தபடி பேசாதே. நாக்கு அழுகிப்
போயிடும்-”

“அடசட் வாயை மூடு பிள்ளே. எத்தினிவாட்டி
சொல்லியிருக்கிறேன். அந்த ஆளோடு சகவாசம் வெச்சுக்
காதே. என் மானம் போவுது. கோவணம் கூட கட்டாதே.
பிறந்த மேனியோடு திரியறானே!”