பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ❖ லா. ச. ராமாமிர்தம்

சோமான்னு நாங்கதான் பாடுவோமே, ஒருத்தி 'கிரி ராஜ ஸுதா தனயா' கொலையே பண்ணிப்பிட்டா. அம்மா, பாட்டு வாத்தியாரைப் பாடச் சொன்னாள்.

அவர் ஊத்துக்காடு வெங்கட சுப்பய்யர் பாட்டு ஒண்ணை அடி எடுத்தார்.

ஸங்கீதத்தைப் பத்தி உங்களிடம் பேசறது எவ்வளவு அதிகப் பிரசங்கித்தனம்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் எனக்கு ஆசையாயிருக்கே!

ஊத்துக்காடு ஸாஹித்யங்கள், பெரும்பாலும் பேசறாப் போலவே, சவுக்கத்தில், ஸுலபமா, ஸஹஜமாயிருக்கும். ஏறக் குறைய proseதான். ஆனால் வர்ணத்தின் கடைசி வரிகள், திவ்ய மிடுக்கு அடுக்குகளுடன் ஸொகுஸ்வர ஒய்யாரமா, ஆடி அசைஞ்சு வருமே தவிர, வார்த்தைக்கு வார்த்தை முடுக்கில் மனுஷன் ஏதோ தங்கப் பொடி வெச்சு ஊதி யிருப்பார்.

என்னப் பாட்டு பாடினார்? முழுப்பாட்டும் நினைவில்லை எத்தனை வருஷமாயும். இருங்கோ சொல்றேன் ‘பால் வடியும் முகம் நினைந்து நினைந்து வசமாகுதே கண்ணா'-பாட்டு மறந்தாலும் அதே வார்த்தைகள் ஒசைகளின் மதப்பு மிதப்பில் என்னை இழந்தேன்.

ஆகவே, அவர் பல்லவி பாடி முடிச்சதும் பெண்கள் கூட்டத்திலிருந்து அனுபல்லவி எழுந்ததும், அது என் குரல்னு எனக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது. அவர் ஒரு வரி பாடி, மறு வரி நான் பாட, எல்லாரும் எங்களை ஆச்சர்யத்தோடு பாக்கறா. கதவு மறைவிலிருந்து அம்மா பல்லைக் கடிச்சுண்டு, கண்ணாலும் கையாலும் தந்தி அடிக்கறா. ஆனால் என்னால் ஒண்ணும் செய்ய முடிய வில்லை. ஒரு மஹத்தான விசனம், ஏக்கம், அதன் போதை,