பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொலு ❖ 115

தன்மெத்தான 'கவ்'வில் இரை போல் என்னை இழுத்துச் செல்ல, நானும் அத்துடன், என் மனமார்ந்து போறேன்.

பெண்டுகள் எங்களைப் பார்த்து, தோளுக்குத் தோள் இடிச்சுண்டு, கிசுகிசுத்துண்டு, திருட்டுத்தனமா சிரிக்கறா.

அந்தப் பாட்டு முடிஞ்சதும் அடுத்த பாட்டுக்கு நானே அடியெடுத்துட்டேன் 'அலைபாயுதே கண்ணா!’

ஒரு சின்ன 'கொல்!'

அதுக்குமேல் அம்மாவுக்குப் பொறுக்கல்லே. வெளியே வந்து என்னைக் கரகரன்னு இழுத்துண்டு போயிட்டா.

“என்னடி நெனச்சுண்டிருக்கே? மானம் போறது!" என் கன்னத்தைப் பிடிச்சு இழைக்கறா. நெற்றியில் நெத்தறா. “உன் ஆம்படையான் இங்கு வந்திருந்தால் நம் கதி என்ன ஆறது? உனக்கும் பாட்டு வாத்தியானுக்கும் என்னவோ முடிச்சுன்னு சந்தேகப்பட்டுட்டான்னா, ஆயுசுக்கும் உன் கொள்ளியை என் வயத்தில் கட்டிண்டு நான் வாழனுமா? டூயட் பாடறியா, டுயட்?”

அம்மா கோவத்துலே நான் பயந்து போய், மயக்கம் தெளிஞ்சு போச்சு வெச்சுக்கோங்கோ.

ஆனால் பாட்டின்போது எனக்கு வந்த அந்த ப்ரம்மாண்ட துக்கம்-இப்ப நெனச்சாக்கூட- தேம்பினாள். “அந்த துக்கம் யாருக்காகவுமில்லே. எதனாலேயுமில்லே. என்ன அது? "அவள் குரல் தவித்தது.

அவர் வார்த்தைகள் தாழ்ந்து, நகநகென, இருளினின்று பிரிந்து வந்து, கதகதப்பாய் அவளை அனைத்தன.

"அதன் பெயர்தான் விசுவப்ரேமை. அந்த சமயத்துக்கு நீ விசுவப்ரேமி ஆகிவிட்டாய். அந்தப் போதுக்கு உனக்கு நீ பாடும் கண்ணன் மீதும் காதல் இல்லை. உன் பாட்டு