பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கமலி ❖ 129


தலைமுறை தலைமுறை எச்சில்
இல்லாவிடில்
இப்புவனமே ஏது?

வந்தவள் சொன்னாளா? நெஞ்சில் தானே தோன்றியதா? ஒரே ஆனந்த மூர்ச்சையில் எந்நேரம் மூழ்கியிருந்தனரோ?

தோட்டத்தில் கிணற்றடியில் பலா மரத்தில், கூட்டில், இரையைத் தாங்கிவரும் தாயைக் கண்டு குஞ்சுகள் ஆர்ப்பரிக்கின்றன.

தூரக் காட்டில் தேன் குருவி பகு சொகுசில் பூவுக்குப் பூ அந்தரத்தில் நின்று தேனை உறிஞ்சுகிறது.

மேகங்களற்ற நிர்ச்சலமான நீலத்தில் வெள்ளித் தாம்பாளம் கண் கூச தகதகக்கிறது. இல்லை, இது அவள் அபய கரத்தில் ஜ்வலிக்கும் மோதிரத்தின் முகப்பு.

நண்பகல் சொக்கல்.

நேரம் முதிர முதிர, அவள் வதங்கலுற்றாள். வேர் கழன்ற இலைபோல் கொஞ்சங் கொஞ்சமாய்த் துவண்டு...

“என்ன குழந்தை ஒருமாதிரி ஆயிட்டே, உடம்பு சரியில்லையா?”

“அவர் நினைப்பு வந்துவிட்டதம்மா.”

“என்ன அதுக்குள்ளேயுமா? சாயந்தரம்தான் போப்போவதாச் சொல்லிண்டிருக்கே! வெள்ளிக்கிழமையுமதுவுமா.”

“அவர் நினைப்பு வந்துட்டதம்மா." நினைப்பு வந்தால் விடாதம்மா. நொடியும் யுகம் அம்மா.”

“நீ என்ன சொல்றேன்னு விளங்கல்லியே!”