பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேண்டப்படாதவர்கள் ❖ 141



 இந்த ஒழுங்குப்பாடுள், இந்தப் பையனின் ப்ரவேசம் அதைக் கலைத்தது மட்டுமல்ல, அவளுடைய தீவையே உலுக்கிற்று. இந்த உலுக்கலை அவள் விரும்பவில்லை. அதனால் குழந்தையுடன் அவளால் ஒட்ட முடியவில்லை. அதற்காகக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட முடியுமா?
 குழந்தை வளர்த்தியாயிருந்தானே தவிர, சுறுசுறுப்பு இல்லை. கண்களில் சூசகையில்லை. பல சமயங்களில் உள்நோக்கி விட்டாற்போல் ஒளி மங்கின. இப்பவே தியானமா? ஜடபரதர், நம்மாழ்வார் மாதிரி அவதாரம் என்று கொள்வதா? சிரிப்பு வந்தது.
 பேச்சும் சரியாக வரவில்லை. மழலையாகவே இருந்து விடுவானோ? அப்படியே எல்லாமே மழலையாகி விடு வானோ? ஸ்பெஷலிஸ்ட் எல்லாப் பரீஷைக்குப் பின்: "தனியாகக் கோளாறு ஏதும் தெரியவில்லை. வளர்ச்சி சற்று தாமதமாகிறது. தாமஸப் பிறவி அல்லவா? போகப் போக Normal, ஏன், இந்த மந்தகதியைச் சேர்த்து வைத்து அதி புத்திசாலியே ஆகிவிடலாம். பையனை அனாவசியமாகத் துரிதப்படுத்தாதீர்கள்." இப்பவே டாக்டர்கள் எங்கே தைரியம் சொல்கிறார்கள்? அபிப்ராயம்தான் தெரிவிக் கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் ஜடமும் மதமதப்பும்தான் தெரிந்தன. உஷையும் ஒரு முடிவுக்கு வந்து அதனுடன் சமாதானமுமாகி விட்டாள். வேறு வழி?
 அவளுடைய கணவன் நல்ல மனுஷன். சாது. கடவுள் தந்ததுடன் சண்டை போட முடியுமா? கலியாணமான புதிதில், ஆபீஸ் விஷயமாய் டில்லிக்குப் போயிருந்த. சமயத்தில், பக்கத்தில் மதுரா-பிருந்தாவனுக்குத் தரிசனத்துக்குப் போய், அங்கு ஒரு சாது கொடுத்த கிருஷ்ண விக்ரஹத்துடன் திரும்பி வந்து தீவிர கிருஷ்ண பக்தராகி விட்டார். பக்தியின் தீவிரம் தன் பெயரைக் கிருஷ்ணானந்த்