பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ❖ லா. ச. ராமாமிர்தம்

நீ தப்பிச்சுட மாட்டே. இந்த ரெண்டு கை இருக்குதே
பார்த்தியா? ஏர் பிடிச்ச கை. மாட்டுக் கொம்பை கொம்
போடு புடுங்கின கை தெரிஞ்சுக்க ஆமா. இது சும்மா
சவால் இல்லே. என்னைப் பாத்தவங்க சாட்சி இருக்காங்க.
உனக்கென்னடா நானு சாட்சி சம்மன் வெக்கறது. ஏண்டா
சோமாரி. மொதல்லே ஏண்டா இங்கே வந்தே? எங்க
நிம்மதியை சாவடிக்க, இன்னும் பொந்துக்குள்ளே
வெளவ்வாலாட்டம் எத்தினிபேர் குகைக்குள்ளே ஒளிஞ்சிட்
டிருக்கீங்க? வெளவ்வால் கடி பெரிய விசக்கடியாச்சே.
ஊரே கூட்டியாந்து இன்னிக்குள்ளே உன்னை வெரட்டி
யாகணும். எத்தினி பேருடா இருக்கீங்க?”

“நானே இங்கே வரவேண்டியவன் இல்லே தம்பி.
என்னவோ வழி தப்பி இந்தப் பாறையில் ஒரு சந்துலேருந்து
மீள வெளிச்சம் தெரியாமே இங்கேயே சுத்திகிட்டு
கிடக்கேன்.”

“ஏன் உன் பில்லி சூனியம் எல்லாம் வேவலியா?”

“இது நீ நெனைக்கற மாதிரியில்லே தம்பி.”

“நீ முறைபோட்டு அழைக்க வேணாம்!” கிழவன்
சீறினான்.

“நமக்குத் தெரிஞ்சாலும் தெரியாட்டியும் எல்லாரும்
முறைதான்-சரி உனக்கு வேணாம்னா விடு. அது உன்
கிட்டே நான் பேசவல்லே. நான் இங்கே மாட்டிக்கிட்டு
இருக்கறது என் விதி. வேளை வந்தால் விதி தானே
பிரிஞ்சுடும். நான் போயிடுவேன்.”

“இப்போ என் பெண்சாதி அநியாயமா செத்துப்
போனதுக்கு என்ன பதில் சொல்றே?”

“நீ கொன்னுட்டு என்னை பதில் கேட்டா நான் என்ன
சொல்ல முடியும்? ஆனால் ஒண்னு சொல்லலாம்.”