பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 : லா. ச. ராமாமிர்தம்

அவளைக் கண்டதும் சக்திவேலின் தலையும் முதுகும் அவனையறியாமல் நிமிர்ந்தன. நடையின் முடுக்கும் அதிகரித்தது.

“இருக்கட்டும், அன்னிக்கு ‘டு விட்டாளல்ல? இன்னிக்கு என்ன பண்ணுவ?”

இவ்வெண்ணம் அவன் மனசில் தோன்றிய அக்கணமே, அவள் கண்கள் அவன் கண்களைச் சந்தித்தன. கண்களும் வாயும் புன்னகை பூத்தன. கை வளையல்கள் சற்று கிலுகிலுத்தன. அவள் ஜாதிக்கே சொந்தமான சாஹஸ் குணங்கள் இப்பொழுதுதான் பிறக்க ஆரம்பித்திருக்கும் இச் சிறு வயதில், அவள் வெகு அற்புதமாக விளங்கினாள். அவள் சிரித்த சிரிப்பு, முன்னாலேயே இவனுக்கும் அவளுக்கும் அவர்கள் பெற்றோர் போட்ட முடிப்பை இறுக்கியது போன்றிருந்தது.

கத்தியை இன்னும் சற்று உயரத் தூக்கிப் பிடித்து, விறைப்பாய் நடந்தான்.

“சபாஷ்!” -

காலை முதல் பட்டினி, பசி வயிற்றைக் கிள்ளியது. ஆனால் அவன் மனத் தீவிரம் குறைந்தபாடில்லை.

கோவில் கோபுர வாசலண்டை வந்து நின்றனர். கூட்டம், கணத்திற்குக் கணம், அதிகரிக்க ஆரம்பித்தது. சம்ஹார வேளை நெருங்கி விட்டது.

“உஷ். ஷ். ஷ்.”

நாலைந்து அவுட்டு வாணங்கள் ஒரே சமயத்தில் ஆகாயத்தில் கிளம்பி வெடித்து, பச்சையும் சிவப்புமாக நக்ஷத்திரங்கள் உதிர்ந்தன. குடைகள் கவிந்தன. ஒரேயடி யாய்க் கரகோஷம், கூட்டத்தின் கோஷம். பகவான் கோபுர