பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூரசம்ஹாரம் * 157

வாசலைக் கடந்து நாலுகால் மண்டபத்தில் வந்து நின்றார். அவரைத் தரிசித்ததும், அவனுள் இதுவரை தூங்கிக் கொண் டிருந்ததோர் பெருங் கடல் திடீரென்று விசையுடன் பொங்கி யெழுந்தது போன்றிருந்தது. கூட்டத்திலொரு கிழவர், “ஊம். ஆவட்டும். சாமியாரைப் போய்ச் சேவிங்க. நேரமாவுது.” என்று இரைந்தார்.

ஒன்பதின்மரும் கற்களும் மண்ணும் நிறைந்த தெருவில் விழுந்து நமஸ்கரித்து, எழுந்து நின்றனர். சக்திவேலின் அங்க வஸ்திரம் சற்று சரிந்து விழுந்தது. அதைச் சரிப்படுத்திக் கொண்டான். அவன் குழந்தை மனம், அவன் கண்களின் வழி வெளிப்பட்டு, பகவானிடம் கலந்தது.

‘யாரோ தெற்குச் சீமை ஆசாமியாம்! இதுக்குன்னு “பெஷலா தருவிச்சாங்களாம்! சாத்துப்படி நடக்கரப்போ, உள்ளே தலைகாட்ட முடியல்லே. பொத்திப் பொத்தி வச்சிக்கினாங்களே, அம்மாடி! இதேப் பாத்தியா?”

ஆயக்காலிட்டுப் பகவானை நிறுத்தி விட்டனர். அன்று எவன் அலங்கரித்தானோ, அவன் தன் பூரண சாமர்த்தியத்தையும் காட்டியிருந்தான். ஆறு முகங்கள், யுத்த கோலம்; ஒரு காலை மண்டியிட்டு வில்லைக் கையில் கொடுத்து அதில் வேலைத் தொடுத்து விட்டிருந்தான். அது புறப்பட வேண்டியதுதான் பாக்கி.

‘அமரரிடரும் அவுனர் உடலும் மடிய விருகை வடிவேலா!”

“சபாஷ்!”

FGJa பொட்டிடித்தது. விறுவிறு வென்று ஒன்பது பேரும் சுவாமியைப் பிரதட்சணம் செய்து, கீழே விழுந்து, நமஸ்கரித்து விட்டு, சூரனின் மர விக்ரஹம் நிறுத்தி