பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திலோ & 185

தோன்றின. பரந்த வெளிகளில், பார்க்குகளில், பெரிய கட்டடங்களின் பின் புறங்களில், மறைவின் அணைப்பு இல்லாத இடங்களில், இந்தப் பள்ளங்கள் ஏறக்குறைய ஆள் உயரத்துக்கும் மேல், மார்பகலத்துக்குத் தோண்டப்பட்டு உள்பக்கம் செங்கல் சுவர்கள் எழுப்பி, இரண்டு மூன்று Zகள் அல்ல Mகள் கோர்த்தாற் போல், வங்கி வங்கியாகக் கோணிக்கொண்டு, கோணங்கள், சிமிட்டிப் பூச்சில் கன கூர்ப்பாய், தோன்றிய புதிதில் சற்று வேடிக்கையாய், ஏன், அழகாய்க்கூட விளங்கின. அபாயச் சங்கு ஊளையிட ஆரம் பித்ததுமே, மக்கள் ஓடி வந்து இந்தப் பள்ளங்களில் பதுங்கிக் கொள்ள வேண்டும். இதற்கு ஜனங்களைப் பழக்கவே விமானத்தாக்குதல் பாதுகாப்புப் படையினரின் ஏற்பாடுகள், பிரசாரங்கள், ஒத்திகைகள், அத்துகள், அமல்கள் நடந்தன. ஆனால் அசல் தாக்குதல் நேராதவரை, ஜனங்களுக்குக் குளிர்விட்டுப் போனதும், இந்தப் பள்ளங்களை வேறு காரியங்களுக்கும் பயன்படுத்தினர். ஆகாயமே கூரையென வாழும் ப்ளாட்ஃபாரம் மக்கள், இந்தப் பள்ளங்களில் கழித்துக் கொப்புளித்து, தோய்த்துக் குளித்துச் சமைத்து, குடித்தனமே நடத்தினர். என்னதான் பாரா போட்டாலும் அவர்களைத் தடுக்க முடியவில்லை. நாளடைவில், காவல் காரனே, இந்தப் பள்ளம் வாழ் மக்களிடமிருந்து, அவர்கள் சுட்ட தோசை, இட்லி, இடியாப்பம், காய்ச்சினது சாயாவோ, சாராயமோ, லஞ்சமாவோ, உபசரிப்பாவோ, காசுக்கோ வாங்கிச் சாப்பிட்டான்.

இது தவிர இரவு வேளைகளில், அவைக்கே உரித்தான வேறு பிழைப்புகள் விழித்துக் கொள்கின்றன. அ-ஹெம்அவைகளுக்கு இந்தப் பள்ளங்கள் செளகர்யமாயிருந்தன.

இரண்டாவது உலக யுத்தம் போது, சென்னை பூண்ட போர்க் கோலத்தின் பூணாரம் இது.