பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 & லா. ச. ராமாமிர்தம்

மற்றது உடலை நக்கிக் கொண்டே குரைத்தது. அதுவும் ரத்த விளாறுதான். சற்று எட்டக் கிடந்த எலும்புத் துண்டை நோக்கி ஓடிற்று.

“Oh all this only for this?” piougo/5(53 &fi'ily Gu. நகர்ந்தான். நடந்தான்.

“Dogs!” பள்ளங்களின் அதுயைகளைப் பார்க்கக் கோபம் வந்தது. அருவருப்பாயிருந்தது. மூக்கையும் வாயையும் கைக் குட்டையுள் புதைத்துக் கொண்டு நடந்தான். கண்கள் அலைந்தன.

“Ah!” அவன் கண்கள் ஒளிரிட்டன. பள்ளத்துள் அவள் நின்று கொண்டிருந்தாள். அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவளுடைய மேட்டு விழிகள் அழைத்தன. ஆனால் முகத்தில் இத்தனை பவுடரும் உதட்டில் இத்தனை சாயமும் அப்பியிருக்க வேண்டாம். ஆனால் எல்லாவற்றிலும் அதிகப்படிதான் அவர்கள் அறிந்த அலங்காரம்.

பள்ளத்துள் குதித்து வந்து அவள் எதிரே நின்றான். புள்ளி நல்லாத்தான் இருக்குது, சர்க்கஸ் புலியாட்டம். ஆனால் அம்மாகிட்ட இப்பத்தான் பால் உண்ண மூஞ்சியா யிருக்குது? ஆனால் அதுபத்தி எனக்கென்ன?

புன்னகை புரிந்தாள். அவனும் இளித்தான். அவன் தோளைத் தொட முயன்றான். அவன் கையை உதறினாள். “நோ, நோ, நோ! ரூப்பி, ரூப்பீ!” விரல்களைச் சுண்டிக் காட்டினாள்.

பான்ட் பைக்குள் கைவிட்டு ஒரு நோட்டை எடுத்து நீட்டினான்.