பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திலோ & 171

“நோ நோ!” தலையைப் பலமாய் ஆட்டினாள். இவங்க கிட்ட சமயத்துலே கறந்தாத்தான் உண்டு.

இன்னொரு நோட்டு. நோ? நோ?” சிரித்துக்கொண்டே இரண்டு வெள்ளி ரூபாய்களை அவள் கையுள் திணித்துத் தன் கையை விரித்தான்.

பணத்தை இடுப்பில் சொருகிக் கொண்டாள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அசட்டுச் சிரிப்பில் நின்றனர். சுற்றுமுற்றும் காலியாத்தானிருந்தது. ஆள் இல்லை. அவங்களுக்குத் தெரியும். புரிஞ்சுக்கிட்டு ஒதுங்கிடுவாங்க. ஒரு புளைப்பு நடக்குதில்லே?

அவள் கையைப் பற்றி இழுத்தான். இப்போது அங்கே ஒரு சொந்தமும் முரட்டுத்தனமும் தெரிந்தன. நேரத்தை விலைக்கு வாங்கியாச்சில்லே?

அவன் கண்கள் கொதித்தன. அவள் தலைமயிரை பற்றித் தன் பக்கமாய் இழுக்க முயன்றான். அங்கு கட்டிய செண்டு மல்லியின் மணமயக்கம் அவனை வெறியனாக் கியது.

அவளுக்குக் கொஞ்சம் பயமாயிருந்தது. அருவருப்பு வேறே. தவளைக் குடலை அறுத்த மாதிரி இதென்ன நிறம்? அப்போது பின்னாலிருந்து அவன் தோளில் ஒரு கை விழ, திரும்பினான்.

இவன் வந்த சந்தடியே கேட்கவில்லையே! பள்ளத்தில் எப்படி இறங்கினான்? குதித்தால் பூட்ஸ் சத்தம் கேட்கல் லியே?

ஆனால் வந்தவனின் வழி வழி வர்க்கம் அதன்